கருணாநிதியுடன் சந்திப்பு: பரிதி இளம்வழுதி மீண்டும் தீவிர அரசியலுக்கு வருகிறார் || paruthi elamvaluthi meet karunanidhi
Logo
சென்னை 31-03-2015 (செவ்வாய்க்கிழமை)
கருணாநிதியுடன் சந்திப்பு: பரிதி இளம்வழுதி மீண்டும் தீவிர அரசியலுக்கு வருகிறார்
கருணாநிதியுடன் சந்திப்பு:
பரிதி இளம்வழுதி மீண்டும்
தீவிர அரசியலுக்கு வருகிறார்
சென்னை, மே. 11-

தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்த பரிதி இளம்வழுதி கட்சியிலும் முக்கிய இடத்தில் இருந்து வந்தார். சட்டசபை தேர்தலுக்குப் பிறகு உள்கட்சி பிரச்சினை காரணமாக தி.மு.க. மேலிடத்தை விமர்சனம் செய்தார். தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் மீதும் குற்றச்சாட்டு கூறினார். இதனால் ஏற்பட்ட மோதலையடுத்து கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் தவிர்த்தார். அவர் வகித்து வந்த தி.மு.க. துணைப் பொது செயலாளர் பதவியையும் கடந்த அக்டோபர் மாதம் ராஜினாமா செய்தார்.

இதையடுத்து அவர் தீவிர அரசியலில் இருந்து விலகினார். நீண்ட நாட்களாக அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்த பரிதி இளம்வழுதி மீண்டும் தி.மு.க.வுக்கு திரும்ப முடிவு செய்துள்ளார். சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்து கொண்டார். அங்கு அவரை பரிதி இளம்வழுதி சந்தித்து பேசினார்.

அதன்பிறகு கோபாலபுரம் சென்று கருணாநிதியை சந்தித்த பரிதி இளம்வழுதி தனது மகள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி கேட்டுக் கொண்டார். இதுபோல் மு.க.ஸ்டாலினையும் சந்தித்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை சந்தித்த போது தனது நடவடிக்கைகளுக்கு வருத்தம் தெரிவித்தார்.

மீண்டும் தி.மு.க.வில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தார். இந்த வாரம் நடைபெற உள்ள பரிதி இளம்வழுதி இல்ல திருமண நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து பரிதி இளம்வழுதி மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாமல் வறுமையில் வாடுவதால் கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 75 சதவீத சம்பள உயர்வு

இந்திய நாட்டின் அரசியலில் தேர்தலில் பணத்தை வாரி இறைப்பதும், வெற்றி பெற்றதும் பணத்தை அள்ளுவதும் வாடிக்கையாகி ....»