தக்கலையில் போலி நகை அடகு வைத்து ரூ.8 லட்சம் மோசடி: வடமாநில வாலிபர்கள் 4 பேர் மீது வழக்கு || gold cheating complaint north state man
Logo
சென்னை 01-12-2015 (செவ்வாய்க்கிழமை)
தக்கலையில் போலி நகை அடகு வைத்து ரூ.8 லட்சம் மோசடி: வடமாநில வாலிபர்கள் 4 பேர் மீது வழக்கு
தக்கலையில் போலி நகை அடகு வைத்து ரூ.8 லட்சம் மோசடி:  வடமாநில வாலிபர்கள் 4 பேர் மீது வழக்கு
அழகியமண்டபம், மே.10-

தக்கலை மேட்டுக்கடை பகுதியில் ஒரு தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இதன் மேலாளர் மகேஷ் பிரிட்டோ. இவர் பத்மநாபபுரம் கோர்ட்டில் ஒரு புகார் மனு தாக்கல் செய்தார். அதில் தங்கள் நிதி நிறுவனத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்கள் ஷேக்பால், ராஜூ, ராஜேஷ், ராதா ஆகிய 4 பேர் 350 கிராம் நகையை அடகுவைத்து ரூ.8 லட்சம் பெற்றனர்.

கடந்த 27.7.2011 அன்று நகை அடகு வைக்கப்பட்டது. அதன்பின்பு கடந்த ஜனவரி மாதம் 27-ந் தேதி எங்கள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து தணிக்கை பிரிவு அதிகாரிகள் வந்து ஆய்வு நடத்தினர். அப்போது ராஜஸ்தான் வாலிபர்கள் அடகு வைத்த 350 கிராம் நகையும் தங்கமுலாம் பூசப்பட்ட போலி நகைகள் என்பது தெரியவந்தது.

எனவே போலி நகைகளை அடகு வைத்து ரூ.8 லட்சம் பண மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று கூறி இருந்தார். மனுவை விசாரித்த கோர்ட்டு இதன் மீது தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதன்படி தக்கலை போலீசார் போலி நகைகளை அடகு வைத்து ரூ.8 லட்சம் மோசடி செய்ததாக ராஜஸ்தான் வாலிபர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - கன்னியாகுமரி

AadidravidarMatrimony_300x100px_28-10-15-3.gif