சிக்கன் பிரியாணி எனக்கு ரொம்ப பிடிக்கும் ரம்யா நம்பீசன் || chicken priyani more like say ramya nambeesan
Logo
சென்னை 30-05-2015 (சனிக்கிழமை)
சிக்கன் பிரியாணி எனக்கு ரொம்ப பிடிக்கும் -ரம்யா நம்பீசன்
விறுவிறுப்பாக உருவாகிவரும் ‘பீட்சா’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னை பாம்குரோவ் ஹோட்டலில் நடைபெற்றது. இச்சந்திப்பில் படத்தின் தயாரிப்பாளார் சி.வி.குமார், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ரம்யா நம்பீசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
ரம்யா நம்பீசன் ராமன் தேடிய சீதை, ஆட்டநாயகன், இளைஞன், குள்ளநரிக் கூட்டம் ஆகிய படங்களுக்குப் பிறகு இப்படத்தில் நடிக்கிறார். முன்பை விட அழகாகவும், ஸ்லிம்மாகவும் தோன்றுகிறார்.
 
சந்திப்பின்போது ரம்யா நம்பீசன் கூறியதாவது:-
 
இப்படத்தில் என்னுடைய நடிப்பு திறமையை வெளிக்காட்ட அருமையான காட்சியமைப்புகளை இயக்குனர் அமைத்திருக்கிறார். மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்திருப்பதால் மொழி பிரச்சினை காரணமாக இதுவரையான படங்களில் டப்பிங் பேசவில்லை.முதன்முறையாக இப்படத்தில் தமிழ் கற்றுக் கொண்டு டப்பிங் பேசப்போகிறேன்.
 
மற்ற நடிகைகளுடன் சுமூகமான போட்டி இருந்தாலும், தமிழில் எனக்கென்று தனி இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன். கிளாமர் ரோல்களில் நடிப்பது ஒன்றும் தவறில்லை. எனக்கு இதுவரை அந்த மாதிரியான கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை. கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன்.நீச்சல் உடைகளில் நடிப்பதில் எனக்கு விருப்பமில்லை.
 
சாப்பிடுவதில் எனக்கு பிரியாணி என்றால் ரொம்ப பிடிக்கும். அதிலும், சிக்கன் பிரியாணி என்றால் ரொம்பவும் பிடிக்கும்  என்று கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - சினிமா செய்திகள்

section1

திருமணம் ரத்தானதால் கவலைப்படவில்லை: திரிஷா

திரிஷாவுக்கும் பட அதிபர் வருண்மணியனுக்கும் கடந்த மாதம் திருமணம் நிச்சயமானது. ஏற்கனவே இருவருக்கும் காதல் இருந்தது. ....»