பல்லடம் பஸ் ஸ்டாண்டில் புதுப்பட திருட்டு சி.டி. விற்ற வாலிபர் கைது || young man arrest for selling new film cd in palladam bus stand
Logo
சென்னை 22-12-2014 (திங்கட்கிழமை)
  • காப்பீடு மசோதாவை அவசர சட்டமாக கொண்டு வர மத்திய அரசு திட்டம்?
  • காஷ்மீர், ஜார்கண்ட் மாநிலங்களில் நாளை ஓட்டு எண்ணிக்கை
  • மாவோயிஸ்டுகளின் திடீர் தாக்குதலால் கேரளாவில் பதட்டம்
பல்லடம் பஸ் ஸ்டாண்டில் புதுப்பட திருட்டு சி.டி. விற்ற வாலிபர் கைது
பல்லடம் பஸ் ஸ்டாண்டில் புதுப்பட திருட்டு சி.டி. விற்ற வாலிபர் கைது
பல்லடம், மே.9-
 
பல்லடம் பகுதியில் திருட்டு சி.டிக்கள் விற்பனை நடைபெறுவதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் பல்லடம் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பல்லடம் பஸ் ஸ்டாண்டில் ஒருவர் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டு பஸ்சில் வந்து செல்வோர்களிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.
 
அவரை பிடித்து விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். அவர் வைத்திருந்த பையை சோதனையிட்ட போது அதில் 43 புதுப்பட சி.டிக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 
போலீசார் அவரிடம் இருந்த ரொக்க பணம் ரூ.540-ம், 43 திருட்டு சி.டிக்களையும் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பிரபாகரன் (வயது 21) என்று தெரிய வந்தது.
 
திருப்பூரில் பட்டுக்கோட்டையன் நகரில் தங்கி திருட்டு சி.டி.க்களை தயார் செய்து விற்று வந்தது தெரிய வந்தது. இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - திருப்பூர்