மேட்டூர் அருகே வீட்டில் 40 பவுன் நகைகள் கொள்ளை || 40 sovriene gold Robbery in mettur
Logo
சென்னை 11-02-2016 (வியாழக்கிழமை)
  • பங்குச் சந்தை இன்று கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 700 புள்ளிகளும், நிப்டி 200 புள்ளிகளும் சரிவு
  • பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 800 புள்ளிகளும், நிப்டி 200 புள்ளிகளும் சரிவு
மேட்டூர் அருகே வீட்டில் 40 பவுன் நகைகள் கொள்ளை
மேட்டூர் அருகே வீட்டில் 40 பவுன் நகைகள் கொள்ளை
மேட்டூர், ஏப், 7-
 
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மூலக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தம்மாள். இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். 4 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தார் கோவிந்தம்மாள்.
 
நேற்று மாலை வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது ஜன்னல் கம்பி வளைக்கப்பட்டு இருந்தது. பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த 40 பவுன் நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கப்பணம ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
 
இவர் வீட்டில் இல்லாததை தெரிந்து கொண்ட கொள்ளையர்கள் ஜன்னல் கம்பியை வளைத்து வீட்டுக்குள் புகுந்து பீரோவையும் உடைத்து அதில் இருந்த 40 பவுன் நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்று உள்ளனர்.
 
அதிர்ச்சி அடைந்த கோவிந்தம்மாள் இது குறித்து கொளத்தூர் போலீசில் புகார் செய்தார். கொள்ளை நடந்த வீட்டை மேட்டூர் டி.எஸ்.பி.கோபால், கொளத்தூர் இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஜன்னல் கம்பிகள் மற்றும் பீரோ ஆகியவற்றில் பதிவான கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.
 
பின்னர் மேட்டூர் டி.எஸ்.பி. கோபால் கூறுகையில் “இந்த திருட்டு சம்பவம் குறித்து விசாரிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்“ என்றார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - மாநிலச்செய்திகள்

section1

செந்துறையில் ஓடும் ரெயில் ஏறிய மாணவர் தவறி விழுந்து 2 கால்கள் துண்டானது: ரெயில் மீது சரமாரி கல்வீச்சு

செந்துறை, பிப். 11–திருச்சி மாவட்டம் தாமரைப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ராமு (வயது ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif