ஐ.பி.எல் போட்டி: ராஜஸ்தான் ராயல்ஸ் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி || ipl 48 league rajasthan royals won by 43 runs
Logo
சென்னை 19-09-2014 (வெள்ளிக்கிழமை)
  • மாண்டலின் இசைக்கலைஞர் ஸ்ரீநிவாஸ் மரணத்திறக்கு பிரதமர் மோடி இரங்கல்
  • வீட்டு பிரியாணி சாப்பிட அனுமதிக்காததால் நட்சத்திர ஓட்டலை காலி செய்த டோனி
  • மதுரையில் 3 பேர் வெட்டிக்கொலை
  • நிலக்கரி ஒதுக்கீட்டு வழக்கில் நடவடிக்கை எடுக்கக் கூடாது: சி.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
  • ஆசிய விளையாட்டுப் போட்டி கோலாகலமாக தொடங்கியது
  • பெங்களூரில் மதிய உணவு சாப்பிட்ட 100 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
  • ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக பிரான்ஸ் முதன்முறையாக வான்வழி தாக்குதல்
ஐ.பி.எல் போட்டி: ராஜஸ்தான் ராயல்ஸ் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
ஐ.பி.எல் போட்டி: ராஜஸ்தான் ராயல்ஸ் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
மொகாலி,மே. 5-
 
ஐ.பி.எல் போட்டித் தொடரின் 48-வது லீக் ஆட்டம் மொகலியில் நடைபெற்றது. இதில் டேவிட் ஹஸ்சி தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், டிராவிட் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
 
ராஜஸ்தான் அணியில் மூன்று மாற்றங்களும், பஞ்சாப் அணியில் ஒரு மாற்றமும் செய்யப்பட்டிருந்தன. கடந்த போட்டியில் ராஜஸ்தான் அணியில் விளையாடிய ஓவைஸ் ஷா, பிராட் ஹாக், கோஸ்வாமி ஆகியோருக்கு பதிலாக ஷாட் டெயிட், ஜோகன் போத்தா, திஷாந்த் யாக்னிக் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர். பஞ்சாப் அணியில் பராஸ் தோக்ரா நீக்கப்பட்டு குர்கீரத் சிங் சேர்க்கப்பட்டார்.
 
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக அஜின்கியா ரகானேவும், ராகுல் திராவிட்டும் களமிறங்கினர்.
 
ரகானே 5 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். இவரையடுத்து திராவிட்டுடன் ஷேன் வாட்சன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
 
வாட்சன் 36 ரன்கள் எடுத்தும், திராவிட் 46 ரன்கள் எடுத்தும் ஆட்டம் இழந்தனர். அடுத்த வந்த அசோக் மெனேரியா 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.  
 
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது.
 
பின்னர் 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ராஜஸ்தான் அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

சூதாட்ட விவகாரம்: பிரண்டன் மேக்குல்லத்திடம் ஆதாரம் இருக்கிறது

நியூசிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் பிரண்டன் மேக்குல்லம். இவர் தன்னை முன்னாள் வீரர் ஒருவர் சூதாட்டத்தில் ....»