கூடங்குளம் அணு மின் நிலைய போராட்டம் : சர்வதேச மன்னிப்பு கழகம் பிரதமருக்கு கோரிக்கை || Kudankulam Nplant issue: Amnesty International plea to PM
Logo
சென்னை 12-02-2016 (வெள்ளிக்கிழமை)
கூடங்குளம் அணு மின் நிலைய போராட்டம் : சர்வதேச மன்னிப்பு கழகம் பிரதமருக்கு கோரிக்கை
கூடங்குளம் அணு மின் நிலைய போராட்டம் : சர்வதேச மன்னிப்பு கழகம் பிரதமருக்கு கோரிக்கை
மதுரை, ஏப்.29
 
கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் எனவும் அவர்களுக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் திரும்ப பெற வேண்டும் என பிரதமருக்கு சர்வதேச மன்னிப்பு கழகம் கோரிக்கை விடுத்து கடிதம் செய்யும் எழுதியுள்ளது.
 
மக்கள் தங்கள் உணர்வுகளை தெரிவிக்க சர்வதேச சட்டப்படி உரிமையுள்ளது எனவும் போராட்டக்காரர்களின் உணர்வுகள் மதிக்கப்படவேண்டும் எனவும், உடனடியாக அவர்களுக்கெதிரான அடக்குமுறைகளை நிறுத்த கோரியும் கோரிக்கை விடுத்துள்ளது.
 
அக்கடிதத்தில் போராட்டக்குழு எழுப்பிய பாதுகாப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கவில்லை என்ற உடைய குமாரின் குற்றச்சாட்டையும் தெரிவித்துள்ள அக்கடிதத்தில் உதயகுமாரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை என்ற பெயரில் மிரட்டப்படுவதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அரசு போராட்டக்காரர்களை ஒடுக்க நினைக்கிறது எனவும் ஆனால் போராட்டம் அமைதி வழியில் நடந்து வருவதாகவும் அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இக்கடிதத்தின் நகல் போரட்ட குழுவிற்கும் பத்திரிக்கைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இக்கடிதத்தில் ஸ்விட்சர்லாந்து நாட்டை சேர்ந்த பீட்டர் கேட்டன் உள்பட சர்வதேச மன்னிப்பு கழக உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

மு.க.ஸ்டாலினின் நமக்கு நாமே பயணம் இன்று நிறைவடைந்தது

சென்னை, பிப். 12–தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் ‘நமக்கு நாமே’ விடியல் மீட்பு பயணத்தை கடந்த ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif