ஓடிசாவில் மீண்டும் தொடங்கியது மாவோயிஸ்டுகளை தேடும் பணி || AntiMaoist operations resume in Odisha
Logo
சென்னை 01-11-2014 (சனிக்கிழமை)
  • ஏடிஎம் கார்டை 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால் ரூ. 20 கட்டணம்: இன்று முதல் அமல்
  • தமிழகத்தில் 3 நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
  • அபுதாபியிலிருந்து கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்
  • மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101 அடியாக உயர்வு
  • புதுச்சேரி சுதந்திர தின விழா: இன்று கொண்டாட்டம்
  • பண்டிகை நாட்களில் டூப்ளிகேட் ரெயில்: ரெயில்வே அமைச்சகம் புதிய திட்டம்
ஓடிசாவில் மீண்டும் தொடங்கியது மாவோயிஸ்டுகளை தேடும் பணி
ஓடிசாவில் மீண்டும் தொடங்கியது மாவோயிஸ்டுகளை தேடும் பணி
புவனேஸ்வர்,ஏப்.28
 
ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ மற்றும்  இத்தாலி நாட்டைச்சேர்ந்த  இரு பயணிகளின் விடுவிப்பிற்கு பின் சுமார் 45 நாட்கள் கழித்து ஓடிஸா மாநில காவல்துறையினர் மீண்டும் மாவோயிஸ்டுகளை தேடும் பணியை தொடங்கினர்.
 
நேற்று இரவு மாவோயிஸ்டுகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. காண்டமால் மாவட்ட எல்லையோரத்தில் சோரகா காவல்நிலையத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக இச் சண்டை நீடித்தது.
 
ஆனாலும் இச்சண்டையில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை எனவும், இச்சண்டை மாவோயிஸ்டுகளின் ஓடிஸா மாநில ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் சபையசாசி பாண்டா அலுவலகத்தில் தேடுதல் வேட்டை நடத்திய  போது  ஏற்பட்டதாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
 
சபையசாசி பாண்டா தலைமையிலான கும்பல் தான் இத்தாலி நாட்டை சேர்ந்த இருவரை கடந்த மார்ச் 14 ம் தேதி கடத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும், இத்தேடுதல் வேட்டையில் ஜெனரேட்டர் மற்றும் அரிசி மூட்டைகளையும் கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 
ஜெனரேட்டர் காட்டில் உள்ள மாவோயிஸ்டுகளின் மொபைல் போனை சார்ஜ் செய்வதற்கும், கணினியை இயக்குவதற்கும் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.காந்தமால் மாவட்டத்திலிருந்து  மாவோயிஸ்டுகள் விரட்டப்பட்டுள்ள நிலையில் சோரகா காட்டுப்பகுதியில் கூடி திட்டம் தீட்ட இருந்ததாகவும் காவல் துறை அதிகாரி மேலும் தெரிவித்தார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

இந்தியா உதவியுடன் பாதை சீரமைப்பு: இலங்கை தமிழர் பகுதி ரெயில் சோதனை ஓட்டம் வெற்றி

இலங்கையில் நடந்த உள்நாட்டு போரால் தமிழர்கள் பெருவாரியாக வாழ்ந்து வரும் வடக்கு பகுதி பெரும்பாதிப்புக்குள்ளானது. அங்கு 26 ....»