2 குழந்தை கொலை பெண் தற்கொலை: கணவர் அதிரடி கைது || child murder mother suicide husband arrested
Logo
சென்னை 31-03-2015 (செவ்வாய்க்கிழமை)
  • கெஜ்ரிவால் மீது ஆம் ஆத்மி முன்னாள் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
  • 2000-ம் ஆண்டில் நடந்த பஸ் எரிப்பு வழக்கில் திருமாவளவன் விடுதலை
  • தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்தது
  • வேளச்சேரி விஜயநகரம் பஸ் நிலையத்தில் முன்பதிவு மையம்: சட்டசபையில் அமைச்சர் தகவல்
  • ஜம்மு- காஷ்மீரில் 15 உடல்கள் மீட்பு
  • பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்பட 9 பேருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
  • மத்திய மந்திரி சபை இன்று மாலை கூடுகிறது: நிலம் கையகப்படுத்தும் மசோதா குறித்து ஆலோசனை
2 குழந்தை கொலை-பெண் தற்கொலை: கணவர் அதிரடி கைது
2 குழந்தை கொலை-பெண் தற்கொலை: கணவர் அதிரடி கைது
மொடக்குறிச்சி, ஏப். 26-

ஈரோடு அருகே உள்ள லக்காபுரம் அடுத்த களப் பாறைகாட்டை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது 35), விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி பெயர் சாந்தி (30). இந்த தம்பதியினருக்கு ரட்சனா (5), அபிநயா (3) என்ற 2 பெண் குழந்தைகள் இருந்தனர்.

கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சாந்தி இருப்பதை விட இறப்பதே மேல் என்று நினைத்தார். தான் இறந்த பிறகு தனது குழந்தைகளும் வேதனை படக்கூடாது என்று முடிவு செய்து நேற்று குழந்தைகளை அழைத்துக் கொண்டு அப்பகுதியில் உள்ள காலிங்கராயன் வாய்க்காலுக்கு சென்றார்.

அம்மா நம்மை எங்கே கூட்டிக் கொண்டு போகிறாள்? என்று உணராத 2 பச்சிளம் குழந்தைகளும் தாய் சென்ற பாதையிலேயே நடந்து சென்றனர். வாய்க்காலுக்கு வந்ததும் மனதை கல்லாக்கிய சாந்தி பெற்றெடுத்த 2 குழந்தைகளையும் ஒவ்வொரு குழந்தையாக தூக்கி வாய்க்காலில் வீசினார். 2 குழந்தைகளும் அம்மா... அம்மா... என்று கூக்குரலிட்டவாறே தண்ணீரில் மூழ்கினர். சிறிது நேரத்தில் மூச்சுத்திணறி இறந்தனர்.

உடனே சாந்தியும் வாய்க்காலில் குதித்தார். அவரும் தண்ணீரில் மூழ்கி பலியானார். 2 குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு மீட்கப்பட்டது. சாந்தியின உடல் கிடைக்க வில்லை. இது பற்றிய தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு மொடக்குறிச்சி போலீசார் சென்று குழந்தைகளின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்த சாந்தியின் உடல் இன்று காலை 10 மணி வரை கிடைக்க வில்லை. தீயணைப்பு வீரர்களும் அப்பகுதியை சேர்ந்த மீனவர்களும் அவரது உடலை இன்று காலையில் இருந்து தொடர்ந்து தேடிவருகிறார்கள்.

இந்த நிலையில் 3 பேர் சாவுக்கு காரணமான சாந்தியின் கணவர் வெள்ளியங்கிரியை மொடக்குறிச்சி போலீசார் கைது செய்தனர். இவர் குடித்து விட்டு வந்து அடிக்கடி மனைவியை கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. அதன் பேரில் போலீசார் வெள்ளியங்கிரியை அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - ஈரோடு