2 வாரத்திற்குள் வடகொரியா அணு ஆயுத ஏவுகணை சோதனை || north korea missle inspection with two weeks
Logo
சென்னை 01-10-2014 (புதன்கிழமை)
2 வாரத்திற்குள் வடகொரியா அணு ஆயுத ஏவுகணை சோதனை
2 வாரத்திற்குள் வடகொரியா அணு ஆயுத ஏவுகணை சோதனை
பீஜிங், ஏப்.24-
 
கொரிய தீபகற்பத்தில் வடகொரியாவும், தென் கொரியாவும் எதிரி நாடுகளாக உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு வடகொரியா நிறுவன தலைவர் கிம் 2 சங் 100-வது பிறந்த நாளை அந்நாடு விமரிசையாக கொண்டாடியது.
 
இதுகுறித்து கருத்து தெரிவித்த தென்கொரியா அதிபர் லீ மியுஸ்பக், மறைந்த வடகொரியா தலைவர் கிம்2 சங் குறித்து அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதற்கு அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் தென்கொரியா மீது தாக்குதல் நடத்துவோம் என வட கொரியா பகிரங்கமாக அறிவித்தது.
 
அதற்கு பதில் அளித்த தென்காரியா அதிபர், வடகொரியா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ரூ.4250 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை சோதனை நடத்தப் போவதாக சமீபத்தில் அறிவித்தார்.
 
இந்நிலையில் வடகொரியா தனது 3-வது அணு ஆயுத ஏவுகணை சோதனையை நடத்த தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த பணிகள் முழுமையாகி விட்டது என்றும் விரைவில் சோதனை நடத்தப்படும் என்றும் வடகொரியா, சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
ஆனால் அது பற்றிய தேதி அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையில் இந்த அணு ஆயுத சோதனையை வடகொரியா இன்னும் 2 வாரத்திற்குள் நடத்தும் என்று தென்கொரியா கூறுகிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

பாகிஸ்தானில் இந்திய மீனவர்கள் 25 பேர் கைது

அரபிக்கடலில், இந்திய- பாகிஸ்தான் எல்லை சரியாக வரையறுக்கப்படவில்லை. இதனால் இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று ....»

160x600.gif
160x600.gif