சட்டிஸ்கர் மாநில கலெக்டர் மேனன் கடத்தல்: பாஸ்டர் பகுதிகளில் மாவோயிஸ்டுகளை தேடுவதை நிறுத்தியது பாதுகாப்பு படை || Chhattisgarh Collector's abduction: Govt halts antiMaoist operations in Bastar
Logo
சென்னை 22-10-2014 (புதன்கிழமை)
  • பரிதாபாத் பட்டாசு மார்க்கெட்டில் தீ விபத்து: 230 கடைகள் சாம்பல்
  • நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி
  • மகாராஷ்டிரா முதல்வர் வேட்பாளர் ரேசில் கட்காரியும் இடம்பெற்றார்
  • மேகாலயவில் 6 உல்பா தீவிரவாதிகள் கைது
  • மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்திய சிவசேனா குழு மும்பை திரும்பியது
சட்டிஸ்கர் மாநில கலெக்டர் மேனன் கடத்தல்: பாஸ்டர் பகுதிகளில் மாவோயிஸ்டுகளை தேடுவதை நிறுத்தியது பாதுகாப்பு படை
சட்டிஸ்கர் மாநில கலெக்டர் மேனன் கடத்தல்: பாஸ்டர் பகுதிகளில் மாவோயிஸ்டுகளை 
தேடுவதை நிறுத்தியது பாதுகாப்பு படை
சுக்மா, ஏப்.23
சத்தீஸ்கர் மாநில சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் நேற்று மாவோயிஸ்டுகள் கடத்தப்பட்டார். இந்நிலையில், சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள பாஸ்டர் பகுதிகளில் பாதுகாப்பு படையினர் மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டையை நிறுத்தி வைத்துள்ளது.
 
கடத்தப்பட்டுள்ள சுக்மா மாவட்ட கலெக்டர் மேனனை சுமார் 500 பேர் கொண்ட மாவோயிஸ்டுகள் இப்பகுதில் தான் பிடித்து வைத்திருப்பதாக தகவல் வந்ததையடுத்து மாவோயிஸ்டுகளோடு ஏதும் முரண்பாடு ஏற்பட்டுவிடாதா வகையில் இப்பகுதியில் தேடுதல் வேட்டையை நிறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன.
 
மேலும் தற்போது, பாதுகாப்பு படையினருக்கு கடத்தப்பட்ட  கலெக்டர் தற்போது எங்கு பிடித்து வைக்கப்பட்டிருக்கிறார் என தெரியும் எனவும் தகவல்கள் தெரிவிகின்றன.
 
இருந்த போதிலும், சட்டிஸ்கர் மாநில முதல்வர், கலெக்டர் மேனனை  மாவோயிஸ்டுகள் விடுதலை செய்யும் வரை பேச்சுவார்த்தை நடத்த விருப்பமில்லை என்று தெரிவித்தார். மேலும் உடனடியாக அவரை விடுதலை செய்யவேண்டுமெனவும் அதன் பிறகே  மாவோயிஸ்டுகளின் கோரிக்கைகள்  குறித்து பேச்சுவார்த்தை நடத்த இயலும் என தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக,  மாவோயிஸ்டுகள் கலெக்டரை விடுதலை செய்ய மார்க்கம் கோபண்ணா என்ற சத்யம் ரெட்டி, நிமல் அக்க என்ற விஜய் லக்ஸ்மி, தேவ் பால் சந்திரசேகர் ரெட்டி, சாந்திப்ரியா ரெட்டி, மீனா, சௌதாரி,கோசா சன்னி, மார்க்கம் சன்னி மற்றும் ஆசித் குமார் சென் ஆகிய நக்சல்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என நிபந்தனை விதித்திருந்தனர்.  
 
மேலும், நக்சல்களுக்கு எதிரான கிரீன் ஹன்ட் எனப்படும்  தேடுதல் வேட்டையை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், நக்சல்களுக்கு எதிரான வழக்குகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுருத்தியிருந்தனர்.  
 
மேலும் இக்கோரிக்கைகளை 25 ம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும் எனவும் மாவோயிஸ்டுகள் நிபந்தனை விதித்திருந்தனர் என்பதும் குறிபிடத்தக்கது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

தொலைந்துப் போன எனது ராஜ்ஜியத்தின் சொத்துக்களை ஒப்படையுங்கள்: ராஜகுல வாரிசு ஐகோர்ட்டில் வழக்கு

குஜராத் மாநிலத்தின் ஒரு பகுதியாக தற்போது இருக்கும் பஞ்சமஹால் மாவட்டம், சுதந்திரத்துக்கு முற்பட்ட இந்தியாவில் சம்பானர் ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif