Logo
சென்னை 19-04-2014 (சனிக்கிழமை)
  • தேர்தல் நாளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டால் சிறை தண்டனை: தேர்தல் ஆணையம்
  • திருப்பத்தூர் அருகே ஏரியில் குளிக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி
இயற்கை எழிலுடன் மின்னொளியில் ஜொலிக்கிறது திருச்சி காவிரி ஆற்றங்கரை: இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்படுகிறது
திருச்சி, ஏப். 22-
 
திருச்சி மாநகர மக்களின் பொழுதுபோக்கிற்கு மலைக்கோட்டையை தவிர சுற்றுலா தலம் வேறு எதுவும் இல்லாதது பெரும் குறையாக உள்ளது. அதனால் மாலை நேரத்தில் குழந்தைகளுடன் காற்றோட்டத்துடன் சிறிது நேரம் பொழுதை கழிக்க திருச்சி காவிரி பாலம்தான் பொழுதுபோக்கு அம்சமாக விளங்குகிறது.
 
இங்கு தினமும் மாலை நேரங்களில் இயற்கை காற்றை சுவாசிக்க பொது மக்கள் பலர் தங்கள் குடும்பத்துடன் வருகை தருவது உண்டு. பாலத்தின் இருபுறமும் ஆங்காங்கே நின்று கொண்டு இயற்கை அழகை ரசிப்பார்கள். ஒரு சிலர் பாலத்தின் நடைபாதையில் நடைபயிற்சி மேற்கொள்வார்கள். ஆனால் பாலத்தின் மீது வாகன போக்குவரத்து அதிகமாக இருப்பதால் சாலையில் இறங்கி நடக்கவோ, அமர்ந்து பேசவோ முடியாது. இது பொதுமக்களுக்கு ஒரு குறையாக இருந்தது.
 
அதோடு பொது மக்கள் தங்கள் வாகனங்களை பாலத்தில் ஆங்காங்கே நிறுத்துவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இந்நிலையில் ஒரு விழாவில் அமைச்சர் என்.ஆர்.சிவபதி பேசும்போது கோடை காலத்தில் திருச்சி மக்கள் பொழுதுபோக்கும் வகையில் காவிரி ஆற்றில் தற்காலிகமாக இயற்கை எழிலுடன் பொழுது போக்குவதற்காக அடிப்படை வசதிகள் செய்து தர முதல்- அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
 
அதன்படி திருச்சி மாநகராட்சி மற்றும் பொதுப் பணித்துறையும் இணைந்து முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட காவிரி பாலத்திற்கு அருகே கருட மண்டபம் படித்துறையை ஒட்டி காவிரி ஆற்றுக்குள் மண்டி கிடந்த நாணல் புற்கள் மற்றும் புதர்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி ஆற்றில் மேடு பள்ளம் இல்லாமல் சமப்படுத்தி உள்ளனர்.
 
மேலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் பொது மக்கள் பயமின்றி காவிரி ஆற்றில் நடமாட வரிசையாக இரும்பு கம்பங்களை நட்டு போதிய மின் விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் இரவில் மின் விளக்குகளில் காவிரி ஆறு சென்னையில் உள்ள மெரீனா 'பீச்' போல் உள்ளது. மாலை நேரங்களில் ஆற்றில் இறங்கி பொதுமக்கள் குடும்பத்துடன் பொழுதை கழிக்க அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அதோடு இங்கு வரும் பொது மக்கள் சிற்றுண்டிகளை சாப்பிடுவதற்காக சிறு கடைளும், ஓட்டல்களும் அமைக்கப்படும். மேலும் பொதுமக்களுக்கு அச்சமின்றி சென்று வர ஏதுவாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
 
மாநகராட்சி மூலம் நாள்தோறும் சுகாதாரமாக பராமரிக்கப்படவும் உள்ளது. மொத்தம் 40 நாட்களுக்கு இந்த வசதிகள் செய்யப்பட்டு இருக்கும். இன்று மாலை (ஞாயிற்றுக்கிழமை) இந்த வசதிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படுகிறது. இந்த பணிகளை அமைச்சர் என்.ஆர்.சிவபதி நேற்று இரவு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது எம்.எல்.ஏ.க்கள் மனோகரன், பரஞ்சோதி, பூனாட்சி, கலெக்டர் ஜெயஸ்ரீ, நகர பொறியாளர் ராஜாமுகமது, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் நெடுமாறன், உதவி செயற்பொறியாளர்கள் சிவபாதம், குமரேசன், இளநிலை பொறியாளர் லோகநாதன், கவுன்சிலர்கள் பச்சையம்மாள், தமிழரசி, முத்துலட்சுமி மற்றும் பலர் உடன் இருந்தனர். 

O
P
E
N

close

அண்மை - மாநிலச்செய்திகள்

section1

காரைக்குடி: ராஜ்நாத்சிங் பேசிய மேடை அருகே ரூ.8 லட்சம் பறிமுதல்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு நேற்று மதியம் பா.ஜ.க தலைவர் ராஜ்நாத்சிங் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக வந்தார். அவர் ....»