விரைவில் கிரிக்கெட் பயிற்சியை தொடங்குகிறார் யுவராஜ் சிங் || yuvraj begins practice
Logo
சென்னை 10-10-2015 (சனிக்கிழமை)
விரைவில் கிரிக்கெட் பயிற்சியை தொடங்குகிறார் யுவராஜ் சிங்
விரைவில் கிரிக்கெட் பயிற்சியை தொடங்குகிறார் யுவராஜ் சிங்
புதுடெல்லி, ஏப்.21-
 
கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு, அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து நாடு திரும்பிய யுவராஜ் சிங் இன்னும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் பயிற்சியை தொடங்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
 
விரைவில் இந்திய அணியில் இடம் பெற விரும்புவதாகவும், இதற்காக இன்னும் ஒரு சில வாரங்களில் பயிற்சியை தொடங்கவிருப்பதாகவும் தெரிவித்த அவர்,  தனது உடல் எவ்வாறு பயிற்சிக்கு ஒத்துழைக்கிறது என்பதை பொறுத்தே பயிற்சியை தொடர வேண்டியதிருப்பதால் கால நிர்ணயம் செய்ய முடியாது என மேலும் அவர் தெரிவித்தார்.
 
மருத்துவர்கள் தற்போது எந்த மருந்தும் கொடுக்கவில்லை எனவும், மருந்தின் விளைவு தற்போது தன உடலை விட்டு முழுவதும் வெளியேறிவிட்டதாக தெரிவித்த யுவராஜ் சிங், தற்போது நாளுக்கு நாள் தன உடல் வலிமை பெற்று வருவதாக தெரிவித்தார்.
 
கடந்த ஐ.பி.எல். போட்டித் தொடரில் புனே வாரியர்ஸ் அணியின் தலைவராக வழி நடத்திய யுவராஜ் சிங், தற்போது அப்பொறுப்பை கங்குலி சிறப்பாக செய்து வருவதாக தெரிவித்தார்.
 
மேலும்,  இந்த ஐ.பி.எல். போட்டியில் தனது அணி சிறப்பாக விளையாடி வருவதாகவும், ரசிகனாக இப்போட்டிகளை கண்டு ரசிப்பது மிகவும் சிறப்பான அனுபவமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

தொழில்முறை குத்துச்சண்டை வீரராக முதல் சவாலை இன்று சந்திக்கிறார், விஜேந்தர்

தொழில்முறை குத்துச்சண்டை வீரராக தனது 2-வது இன்னிங்சை தொடங்கும் இந்தியாவின் விஜேந்தர்சிங் தனது முதல் போட்டியில் இங்கிலாந்தை ....»

VanniarMatrimony_300x100px_2.gif