ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும்: கலெக்டரிடம் கிராம மக்கள் மனு || bull tamiing Permission must provide
Logo
சென்னை 03-09-2015 (வியாழக்கிழமை)
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும்: கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
ஜல்லிக்கட்டு நடத்த
அனுமதி வழங்க வேண்டும்: கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
மானாமதுரை, ஏப். 21-
 
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் கட்டிக்குளம் கிராமம் 21 உள்கடை கிராமங்களை கொண்ட தாய் கிராமமாகும். இங்கு தெப்பத்துடன் கூடிய சூட்டுக்கோல் ராமலிங்கசுவாமி கோவில், மாயாண்டி சித்தர் மடம், செல்லப்பசாமி மடம், அய்யனார் கோவில் போன்ற வழிபாட்டு தலங்கள் உள்ளன.
 
ஆண்டுதோறும் சூட்டுக் கோல் ராமலிங்கசுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா சிறப்பாக நடைபெறும். அப்போது கிராமத்தில் தேரோட்டம் நடைபெறும்.  சிவகங்கை சமஸ்தான மன்னர் ஆட்சி காலத்தில் இருந்து சரித்திரம் பேரும் தாமிரப்பட்டயமும் கட்டிக்குளம் கிராமம் பெற்றுள்ளது. பல ஆண்டுகளாக கட்டிக்குளம் கிராமத்தில் அய்யனார் கோவிலுக்கு திருவிழா நடத்தப்படும்போது ஜல்லிக்கட்டு விழா நடைபெறும்.
 
இந்த ஆண்டு இக்கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அரசிதழில் அறிவித்து அனுமதி வழங்க வேண்டும் என கட்டிக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கவாசகம் தலைமையில் கிராம முக்கியஸ்தர்கள், முன்னாள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ராமகிருஷ்ணன், ஓய்வு பெற்ற உதவி தொடக்க கல்வி அலுவலர் சேது ராமச்சந்திரன், மங்களேஸ்வரன், குருவு, வீறு, சிங்கம், அய்யனார் கோவில் டிரஸ்டி நோபிள் ஆகியோர் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - சிவகங்கை

section1

பெண் கொடுக்க மறுத்ததால் பிளஸ்–2 மாணவிக்கு சரமாரி கத்திக்குத்து: வாலிபர் கைது

மானாமதுரை, செப். 3– சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மூங்கில் ஊரணி கிராமத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகள் ....»