முசிறி கைகாட்டி அருகே கழிவு நீரோடை சீரமைக்கப்படுமா? || musiri near Waste Stream
Logo
சென்னை 12-02-2016 (வெள்ளிக்கிழமை)
  • 20 ஆயிரம் வாக்குசாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்: தலைமை தேர்தல் ஆணையர்
  • ராணுவ வீரர் ஹனுமந்தப்பா உடலுக்கு ராகுல்காந்தி, மனோகர் பாரிக்கர், கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மரியாதை
முசிறி கைகாட்டி அருகே கழிவு நீரோடை சீரமைக்கப்படுமா?
முசிறி கைகாட்டி அருகே கழிவு நீரோடை சீரமைக்கப்படுமா?
முசிறி, ஏப்.21-
 
முசிறி கைகாட்டி அருகே துறையூர் ரோட்டில் சுமார் மூன்று மாதங்களாக சாக்கடைகள் சுத்தம் செய்யபடாததால் ரோட்டில் நடந்து செல்பவர்கள் உட்பட பலரும் துர்நாற்றம் காரணமாக அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
 
முசிறி கைகாட்டி அருகே துறையூர் ரோட்டில் வாடகை கார் ஸ்டான்டு எதிரே பேரூராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் செல்லும் சாக்கடை ஓடுகிறது. கை காட்டியிலிருந்து வடக்கு நோக்கி செல்லும் துறையூர் ரோட்டில் உள்ள சாக்கடையில் பேக்கரி, ஹோட்டல், பர்னீச்சர், ஜவுளிகடை , பாத்திர கடை , தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றின் கழிவுநீர் செல்கின்றன.
 
ஹோட்டல் மற்றும் ஸ்டூடியோவின் வாசலில் உள்ள சாக்கடை பகுதிகள் சுமார் மூன்று மாதங்களுக்கு மேலாக குப்பைகள் அள்ளப்படாததால் தண்ணீர் தேங்கி சாக்கடை நீர் முழுவதுமாக வழிந்து துறையூர் ரோட்டில் செல்கிறது. சாக்கடை நீரின் துர் வாடை காரணமாக மூக்கை பிடித்துக் கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
 
கிருமிகள் தொற்று ஏற்படவும் சாப்பிட வருபவர்களுக்கு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சாக்கடையினுள் குப்பை கூழங்கள் அதிகமாக உள்ளதாலும் தண்ணீர் தேங்கி உள்ள இடத்திற்கு அருகே உள்ள சாக்கடை பகுதி அடைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளதால் தண்ணீர் செல்லமுடியாத சூழ்நிலை உள்ளதுடன் சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது.
 
பேரூராட்சி பணியாளர்கள் நாள்தோறும் இந்த பகுதியில் ரோட்டில் கிடக்கும் குப்பைகளை அள்ளி செல்கின்றனர். ஆனால் சாக்கடை தேங்கி தண்ணீர் வழிந்து ரோட்டில் செல்வதை கண்டும் காணாமல் சென்று வருகின்றனர்
 
எனவே முசிறி பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியவை ரோட்டில் சாக்கடை நீர் செல்வதால் ஏற்படும் சுகாதார கேட்டை தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக சாக்கடைநீர் தடையின்றி செல்ல ஏற்பாடு செய்வதுடன், சாக்கடையில் உள்ள குப்பை கூழங்களை அகற்றவும் தனியாரால் சாக்கடை ஆக்கிரமிப்பு செய்து அடைக்கப்பட்டுள்ளதை சரிசெய்ய வேண்டுமென பொதுமக்கள் விரும்புகின்றனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - திருச்சி

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif