ராமஜெயம் கொலை வழக்கு: தனிப்படை போலீஸ் வளையத்தில் திருச்சி தி.மு.க. பிரமுகர்கள் || ramajayam murder case trichy dmk members
Logo
சென்னை 03-03-2015 (செவ்வாய்க்கிழமை)
ராமஜெயம் கொலை வழக்கு: தனிப்படை போலீஸ் வளையத்தில் திருச்சி தி.மு.க. பிரமுகர்கள்
ராமஜெயம் கொலை வழக்கு: தனிப்படை போலீஸ் வளையத்தில்
 திருச்சி தி.மு.க. பிரமுகர்கள்
திருச்சி, ஏப். 20-

திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என். நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த மாதம் 29-ந்தேதி படுகொலை செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை குறித்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ் குமார் உத்தரவின் பேரில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

ராமஜெயம் தொழில் போட்டியில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்று தீவிர விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது குடும்பத்தினர் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் ராமஜெயம் கடைசியாக பேசிய அவரது செல்போன் எண்களையும் வைத்து விசாரிக்கப்பட்டது. பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசார் சுமார் 600 பேரிடம் விசாரணை நடத்தியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

கூலிப்படைளை ஏவி ராமஜெயம் கொலை நடந்திருக்கலாம். என்பதால் தனிப் படை போலீசார் மதுரை, நெல்லை, துத்துக்குடி ஆகிய இடங்களுக்கும் சென்று விசாரித்தனர். அதேநேரத்தில் தனிப்படை போலீசாரின் நடவடிக்கையில் நம்பிக்கை இல்லாமல், ராமஜெயம் குடும்பத்தினர் சி.பி.ஐ. விசாரணை உத்தரவிட கோரி கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே ராமஜெயத்துடன் நெருங்கி பழகிய தி.மு.க. பிரமுகர்களை ஒவ்வொரு நபராக தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். இதில் பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மணிகண்டம் ஒன்றிய செயலாளர் பழனியாண்டியை தனிப்படை போலீசார் நேற்று விசாரித்தனர். அவர் தனிப்படை போலீசார் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி தனிப்படை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், தி.மு.க. பிரமுகர்கள் சிலரை விசாரணைக்கு அழைத்துள்ளோம், அவர்கள் கூறும் தகவல்களை வைத்தும் புதிய கோணத்தில் விசாரணையை முடுக்கி வருகிறோம். கூடிய விரைவில் கொலையாளிகளை நெருங்கி விடுவோம் என்று நம்பிக்கையுடன் தொ¤வித்தார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - திருச்சி

amarprakash160600.gif
amarprakash160600.gif