இந்தியா எதிரி நாடு அல்ல: அக்னி 5 ஏவுகணை சோதனை பற்றி சீனா கருத்து || india not a enemy country china informations about agni 5 missle
Logo
சென்னை 31-10-2014 (வெள்ளிக்கிழமை)
இந்தியா எதிரி நாடு அல்ல: அக்னி-5 ஏவுகணை சோதனை பற்றி சீனா கருத்து
இந்தியா எதிரி நாடு அல்ல: அக்னி-5 ஏவுகணை சோதனை பற்றி சீனா கருத்து
பீஜிங், ஏப்.19-
 
இந்தியா இன்று அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு, 5 ஆயிரம் கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கை துல்லியமாக சென்று தாக்கும் வல்லமை கொண்ட, அக்னி-5 ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது.
 
இதுபற்றி சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் லியூ வெய்மின் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது:-
 
இந்தியாவின் ஏவுகணை சோதனை பற்றி சீனா முன் எச்சரிக்கையுடன் கவனத்தில் கொண்டுள்ளது. இரு நாடுகளிடையேயும் நல்ல நட்புறவு நிலவி வருகிறது. ஆசிய கண்டத்தில் சீனாவும், இந்தியாவும் சக்தி வாய்ந்த நாடுகளாக வளர்ந்து வருகின்றன.
 
இந்தியா எங்களுக்கு எதிரி நாடு அல்ல. இரண்டு நாடுகளும் கூட்டுறவு பங்காளிகள். நாங்கள் ஒத்துழைப்புடன் சந்தோஷமாக செயல்படுவோம்.
 
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி இரு நாடுகளிடையேயும் ராஜாங்க ரீதியாக நட்புறவை முன்னெடுத்து செல்வோம்.
 
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

அமெரிக்காவில் குட்டி விமானம் விழுந்து நொறுங்கியது: 4 பேர் பலி

வாஷிங்டன், அக். 31–அமெரிக்காவில் கன்காஸ் பகுதியில் விசிதா என்ற இடத்தில் விமான நிலையம் உள்ளது. நேற்று ....»