கோவையில் பெண்களிடம் நகை பறித்த கொள்ளையர்கள் கைது || kovai ladies jewel robbery robbers arrest
Logo
சென்னை 08-02-2016 (திங்கட்கிழமை)
  • நட்சத்திர கிரிக்கெட் போட்டி: சென்னை மீண்டும் தோல்வி
  • விசாகப்பட்டினம்: சர்வதேச நாடுகளின் கடற்படை ஆய்வு நிகழ்ச்சிகளை பார்வையிட்டு பிரதமர் மோடி உரை
கோவையில் பெண்களிடம் நகை பறித்த கொள்ளையர்கள் கைது
கோவையில் பெண்களிடம் நகை பறித்த கொள்ளையர்கள் கைது
கோவை, ஏப். 15-
 
கோவை மாநகர மேற்கு பகுதியில் தனியாக நடந்து செல்லும் பெண்களை வழிமறித்து சிலர் நகைகளை பறித்துச் செல்வதாக போலீசுக்கு ஏராளமான புகார்கள் வந்தது.
 
அதன் பேரில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யுமாறு மாநகர போலீஸ் கமிஷனர் சுந்தரமூர்த்தி உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் மேற்கு பகுதி உதவி கமிஷனர் முருகசாமியின் நேரடி மேற்பார்வையில் கடை வீதி குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
 
இந்த தனிப்படையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அப்புசாமி மற்றும் போலீசார் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கோவை தியாகி குமரன் மார்க்கெட் பிளேக் மாரியம்மன் கோவில் முன்பு சந்தேகப்படும் படியாக 2 பேர் நின்று கொண்டிருந்தனர்.
 
அவர்களை பிடித்து விசாரித்ததில் பெண்களிடம் நகை பறித்த வழக்கில் இவர்களுக்கு தொடர்பிருப்பது தெரிய வந்தது. அதன் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
 
கைதானவர்களின் ஒருவன் கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த அரி (வயது 23) மற்றொருவன் கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்த கார்த்திக் (28). கைதானவர்களிடம் இருந்து 22 1/2 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - கோவை

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif