சுஷ்மா சுவராஜ் தலைமையில் எம்.பி.க்கள் குழு நாளை பயணம்: 6 நாள் சுற்றுப்பயண விவரம் || susma swaraj head srilanka rajapakse srilanka tamilar
Logo
சென்னை 23-05-2015 (சனிக்கிழமை)
சுஷ்மா சுவராஜ் தலைமையில் எம்.பி.க்கள் குழு நாளை பயணம்: 6 நாள் சுற்றுப்பயண விவரம்
சுஷ்மா சுவராஜ் தலைமையில்  எம்.பி.க்கள் குழு நாளை பயணம்: 6 நாள் சுற்றுப்பயண விவரம்
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்தியா சார்பில் நடைபெறும் மறுசீரமைப்பு பணிகளை பார்வையிட அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு இலங்கை செல்கிறது.   எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் 14 எம்.பி.க்கள் இடம் பெற்று இருந்தனர். இதில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் விலகிக் கொண்டதால் 12 எம்.பி.க்கள் மட்டுமே செல்கிறார்கள். இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 5 பேர் மட்டுமே.
 
காங்கிரஸ் சார்பில் என்.எஸ்.வி. சித்தன், சுதர்சன நாச்சியப்பன், எம். கிருஷ்ணசாமி, மாணிக்தாகூர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் டி.கே. ரங்கராஜன் இடம் பெற்றுள்ளனர். அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழு நாளை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கொழும்பு செல்கிறது. அங்கு அவர்கள் 6 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார்கள். இறுதியாக அதிபர் ராஜபக்சேயுடன் விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
நாளை கொழும்பு போனதும் மறுநாள் (17-ந்தேதி) காலை வெளியுறவு மந்திரி பெரிஸ்சையும், இலங்கை பொருளாதார வளர்ச்சி மந்திரி பசில் ராஜபக்சேவையும் சந்தித்து பேசுகிறார்கள். தொடர்ந்து இலங்கை பாராளுமன்றத்துக்கு எம். பி.க்கள் குழு செல்கிறது. அங்கு சபாநாயகர் சாமல் ராஜபக்சேவை சந்திக்கிறார்கள். அவர் எம்.பி.க்களுக்கு மதிய விருந்து அளிக்கிறார். இலங்கை வடக்குப் பகுதி தமிழ்தேசிய கூட்டணி பிரதிநிதிகளையும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தோட்ட தொழிலாளர் காங்கிரஸ் நிர்வாகிகளையும் சந்திக்கிறார்கள்.
 
எம்.பி.க்கள் குழுவுக்கு கொழும்பில் உள்ள இந்திய தூதர் அசோக் கே.கந்தா விருந்தளிக்கிறார். அதன் பிறகு வடக்கு பகுதியில் ரெயில்வே சார்பில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறும் மெடவாச்சியா செல்கிறார்கள். முல்லைத் தீவு பகுதியையும் பார்வையிடுகிறார்கள். யாழ்ப்பாணத்துக்கும் சென்று தமிழ் எம்.பி.க்களையும், மனித உரிமைசங்க பிரதி நிதிகளையும் சந்தித்து கலந்துரையாடுகிறார்கள். யாழ்ப்பாணத்தில் இரவு தங்குகிறார்கள்.
 
ஏப்ரல் 19-ந்தேதி காங்கேசன்துறை துறைமுகம் செல்கிறார்கள். அங்கு இந்திய அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் துறைமுக சீரமைப்பு பணிகளை பார்வையிடுகிறார்கள். காங்கேசன்துறை துறைமுகத்துக்கும், தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்துக்கும் இடையே வர்த்தக தொடர்பு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணி அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே நாளில் குலதாராவில் தென்னக ரெயில்வே சார்பில் நடைபெறும் பணிகளை பார்வையிட்ட பின்பு இலங்கை எதிர்க்கட்சி தலைவர் ரனில் விக்ரம சிங்கேயை சந்தித்து பேசுகிறார்கள்.
 
20-ந்தேதி கிழக்கு மற்றும் மலை பகுதிகளை பார்வையிட்டு அங்குள்ள மக்களை சந்திக்கிறார்கள். சமீபத்தில் காந்திசிலை உடைக்கப்பட்ட மட்டக்களப்பு பகுதிக்கும் சென்று மாகாண முதல்- மந்திரியை சந்தித்து பேசுகிறார்கள். 21-ந்தேதி காலை அதிபர் ராஜபக்சேவை எம்.பி.க்கள் குழு சந்திக்கிறது. அவர் அளிக்கும் விருந்தில் பங்கேற்கிறார்கள். இலங்கை ராணுவ செயலாளர் கோத்தபய ராஜபக் சேவை சந்திக்கும் நிகழ்ச்சி இடம் பெறவில்லை. 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

தமிழகத்தில் 85 லட்சம் பேர் வேலைக்கு காத்திருக்கிறார்கள்: இளங்கோவன் அறிக்கை

சென்னை, மே. 23–தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:–கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது ....»

160x600.gif