மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் மூழ்கி வாலிபர் பரிதாப சாவு || young man drown in pavani river and dead in mettupalayam
Logo
சென்னை 09-10-2015 (வெள்ளிக்கிழமை)
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் மூழ்கி வாலிபர் பரிதாப சாவு
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் மூழ்கி வாலிபர் பரிதாப சாவு
மேட்டுப்பாளையம், ஏப். 14-
 
திருப்பூர் மாவட்டம் கரடிவாவி நடுவீதியைச் சேர்ந்தவர் சுந்தரம். கூலி தொழிலாளி. இவரது மகன் கார்த்திகேயன் (வயது 22). கரடிவாவியில் உள்ள தனியார் கம்பெனியில் கூலி வேலை செய்து வந்தார்.
 
நேற்று தமிழ்ப் புத்தாண்டையொட்டி கார்த்திகேயன் மற்றும் அவரது நண்பர்கள் முரளி (20), செந்தில்குமார் (23) ஆகியோர் வீட்டில் இருந்து புறப்பட்டு சாமி கும்பிடுவதற்காக மேட்டுப்பாளையம் அருகே உள்ள வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்தனர்.
 
சாமி கும்பிடுவதற்கு முன்னர் நெல்லித்துறை பாலத்திற்கடியில் பவானி ஆற்றில் குளிக்கச் சென்றனர். முரளி, செந்தில்குமார் ஆகியோர் பவானி ஆற்றின் கரையோரம் நின்று கொண்டனர். கார்த்திகேயன் மட்டும் குளிக்கச் சென்றார்.
 
குளித்துக்கொண்டிருக்கும் போது கார்த்திகேயன் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டார். நீரில் மூழ்கி தத்தளித்த அவர் மூச்சுச்திணறி சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.
 
இது பற்றி தகவல் கிடைக்கப் பெற்றதும் மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், ஏட்டு சுரேஷ், மற்றும் மேட்டுப்பாளையம் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
 
தீயணைப்பு படைவீரர்கள் நீரில் மூழ்கி இறந்த கார்த்திகேயனின் உடலைத் தேடும் பணியில் ஈடுபட்டார்கள். சுமார் ஒரு மணி நேரம் போராடி உடலை மீட்டனர். போலீசார் பிணத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - நீலகிரி

VanniarMatrimony_300x100px_2.gif