தூத்துக்குடி இலங்கை கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்குவதில் தாமதம் || tuticorin colombo ship transport again late for start
Logo
சென்னை 12-02-2016 (வெள்ளிக்கிழமை)
தூத்துக்குடி-இலங்கை கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்குவதில் தாமதம்
தூத்துக்குடி-இலங்கை கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்குவதில் தாமதம்
தூத்துக்குடி,ஏப்.14-
 
தூத்துக்குடி-கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இந்த கப்பல் போக்குவரத்து கடந்த நவம்பர் மாதம் 18-ந் தேதியுடன் நிறுத்தப்பட்டது.
 
இந்தநிலையில் தூத்துக்குடி-கொழும்பு இடையே சிறிய பயணிகள் கப்பல் வரும் 19-ந் தேதி இயக்கப்படும் என துறைமுக பொறுப்பு கழகம் அறிவித்தது. கப்பல் இயக்குவதற்கு பிளமிங்கோ லயன்ஸ் என்ற ஷிப்பிங் கார்ப்பரேசன் நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது. ஆனால் இதற்கான முன்னேற்பாடு பணிகள் எதுவும் நடைபெறவில்லை.
 
மேலும் இலங்கைக்கு செல்ல வேண்டுமென்றால் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தில் முன்கூட்டியே விசா பெறவேண்டும் என்ற நிலை கடந்த ஜனவரி மாதம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கப்பலில் செல்ல மக்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது.
 
சிறிய கப்பல் இயக்கப்படும் என்ற அறிவிப்புக்கு பிறகு இலங்கை செல்ல இதுவரை யாருமே முன்பதிவு செய்யவில்லை. இது துறைமுக நிர்வாகத்துக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திட்டமிட்டபடி ஏப்ரல் 19-ந் தேதி தூத்துக்குடி- கொழும்பு இடையே கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்குவதில் தாமதம் ஏற்படும் என தெரிகிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தூத்துக்குடி

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif