பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை சித்திரை 1 ந்தேதி திறந்து விளைபொருட்கள் ஏலம் நடத்த ஏற்பாடு || regulation showrroom opened on sithirai first for product auctioned
Logo
சென்னை 12-02-2016 (வெள்ளிக்கிழமை)
பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை சித்திரை 1-ந்தேதி திறந்து விளைபொருட்கள் ஏலம் நடத்த ஏற்பாடு
பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை சித்திரை 1-ந்தேதி திறந்து
விளைபொருட்கள் ஏலம் நடத்த ஏற்பாடு
பெரம்பலூர், ஏப்.10-
 
பெரம்பலூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் தமிழ்ப் புத்தாண்டான சித்திரை பிறப்பன்று(13-ந் தேதி) திறந்து விளை பொருட்கள் ஏலம் நடத்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
இது குறித்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் தரேஸ்அஹமது விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
 
பெரம்பலூர் மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலம் ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமைகளில் பருத்தி மற்றும் மக்காச்சோளம் விளைப்பொருட்கள் வரப் பெற்றுவருகிறது. வருகிற 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அரசு விடுமுறை நாளாக இருப்பினும் விவசாயிகளின் நலன் கருதி வேளாண் விளைப் பொருட்கள் விற்பனை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
கடந்த வெள்ளிக்கிழமை அன்று பருத்தி அதிகபட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரத்து 166-க்கு விற்பனை ஆனது. விவசாயிகள் அன்றைய தினம் கொண்டு வந்த 736 மூட்டைகள் பருத்தி மொத்தம் ரூ.10 லட்சத்திற்கு விற்பனை ஆனது.
 
பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரந் தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் விற்பனையில் பருத்தி, மக்காச்சோளம் ஆகிய விளைப்பொருட்களை விற்று விவசாயிகள் பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
 
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - பெரம்பலூர்

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif