இலங்கையில் போர் பாதித்த பகுதிகளை இந்திய எம்.பி.க்கள் குழு 1 வாரம் பார்வையிடுகிறது: ராஜபக்சேயை சந்திக்க திட்டம் || srilanka war affection area visi indian mb gang
Logo
சென்னை 30-03-2015 (திங்கட்கிழமை)
இலங்கையில் போர் பாதித்த பகுதிகளை இந்திய எம்.பி.க்கள் குழு 1 வாரம் பார்வையிடுகிறது: ராஜபக்சேயை சந்திக்க திட்டம்
இலங்கையில் போர் பாதித்த பகுதிகளை இந்திய எம்.பி.க்கள் குழு 1 வாரம் பார்வையிடுகிறது: ராஜபக்சேயை சந்திக்க திட்டம்
புதுடெல்லி, ஏப். 8-
 
இந்திய எம்.பி.க்கள் குழு அங்கு 1 வாரம் சுற்றுப்பயணம் செய்து இலங்கை தமிழர்களின் நிலையை கண்டு அறிகிறது. வருகிற 16-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை இந்த குழு பார்வையிடுகிறது. இந்த குழுவில் மொத்தம் 15 எம்.பி.க்கள் இடம் பெற்று உள்ளனர்.
 
பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், பாரதீய ஜனதா எம்.பி.யுமான சுஷ்மா சுவராஜ் இந்த குழுவுக்கு தலைமை தாங்குகிறார். காங்கிரஸ், பா.ஜனதா, தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் இடதுசாரிகள் கட்சியை சேர்ந்தவர்கள் இந்த குழுவில் இடம் பெற்று உள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர் இதில் இடம் பெற்று உள்ளனர். காங்கிரசை சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன், என்.எஸ்.வி. சித்தன், கிருஷ்ணசாமி, மாணிக் தாகூர், தி.மு.க.வைச் சேர்ந்த டி.கே.எஸ். இளங்கோவன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் ரங்கராஜன் ஆகியோரும் இலங்கை செல்கிறார்கள்.
 
அ.தி.மு.க. சார்பில் ரபி பெர்னார்ட் இடம் பெற்று உள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு, நலத்திட்டங்களுக்காக இந்திய அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இந்த குழுவினர் இலங்கையில் உள்ள தமிழர்களை நேரில் சந்தித்து அவர்களுடைய நிலைமையை கண்டு அறியும். இலங்கை தமிழர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை முறையாக செலவு செய்யப்படுகிறதா? மறுவாழ்வு பெற்ற தமிழர்கள் எவ்வளவு, மனித உரிமை மீறல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நிலை என்ன? எடுக்கவேண்டிய நடவடிக்கை என்ன என்பதையும் பாதிக்கப்பட்டவர்களிடம் இந்த குழுவினர் கேட்டு அறிகிறார்கள்.
 
யாழ்ப்பாணம், கிளிநொச்சி பகுதிகளுக்கு இந்த குழுவினர் செல்ல உள்ளார்கள். அங்குள்ள தமிழ் கட்சிகளிடம், சாதாரண மக்களிடமும் நிலைமையை கேட்டு அறிவார்கள். இந்திய எம்.பி.க்கள் குழு இலங்கை அதிபர் ராஜபக்சேவையையும் சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

ஓடுபாதையில் மோதி விபத்துக்குள்ளான ஏர் கனடா விமானம்: 23 பயணிகள் காயம்

கனடாவில் ஏர் கனடா விமானம் தரையிறங்கும்போது மோசமான வானிலை காரணமாக ஓடுபாதையில் மோதி விபத்துக்கு உள்ளானது. ....»