பெருந்துறை அருகே புலித்தோல் எலும்புகளை விற்க முயன்ற மத போதகர் உள்பட 6 பேர் கைது || six person arrest near perunthurai for try to selling tiger skin
Logo
சென்னை 09-02-2016 (செவ்வாய்க்கிழமை)
பெருந்துறை அருகே புலித்தோல்-எலும்புகளை விற்க முயன்ற மத போதகர் உள்பட 6 பேர் கைது
பெருந்துறை அருகே புலித்தோல்-எலும்புகளை விற்க முயன்ற மத போதகர் உள்பட 6 பேர் கைது
ஈரோடு, ஏப்.8-
 
ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியில் சிலர் புலித்தோலை விற்க முயற்சி செய்வதாக, ஈரோடு மண்டல வனப்பாதுகாவலர் அருணுக்கு தகவல் கிடைத்தது. எனவே அவர் புலித்தோலை விற்க முயற்சி செய்யும் கும்பலை பிடிக்க தனிப்படையை அமைத்தார்.
 
இந்த தனிப்படையினர் பெருந்துறை 4 வழிச்சாலையில் உள்ள ஒரு பாலத்தின் அருகில் வாகன சோதனை நடத்திக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ஒரு காரில் சிலர் சந்தேகப்படும்படி உட்கார்ந்து கொண்டு இருந்தனர்.எதிர்பகுதியில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டு இருந்தனர்.
 
வனத்துறை அதிகாரிகள் காரில் சோதனை செய்தனர். அப்போது அங்கு புலித்தோல் ஒன்றும், புலியின் எலும்புகளும் இருந்தன. இதனால் வனத்துறை அதிகாரிகள் காரில் இருந்தவர்களை பிடிக்க முயன்றனர். இதற்குள் காரில் இருந்த 2 பேர் தப்பி ஓடி விட்டனர். மீதி 4 பேரும் அதிகாரிகளிடம் சிக்கி கொண்டனர்.
 
இவர்களிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், காரில் இருந்தவர்கள் ஊட்டி கீழ்கோத்தகிரியைச் சேர்ந்த துக்கி (வயது 49), கோவை வீரகேரளத்தைச் சேர்ந்த மத போதகரான பீட்டர் குமார் (46), கோவை மருதாசலத்தைச் சேர்ந்த நாகராஜ் (36), கேரளா மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த சந்தோஷ் (39) என்பதும், தப்பி ஓடியவர்கள் திருப்பூரைச் சேர்ந்த ரகு, கார் டிரைவர் ராஜன் என்பதும் தெரியவந்தது.
 
மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் கோவை சாணப்பாறையைச் சேர்ந்த கண்ணன் (28), வடவள்ளியைச் சேர்ந்த சுந்தரராஜ் (31) என்பதும் தெரியவந்தது. இவர்களிடம் வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.
 
அப்போது, தப்பி ஓடிய ரகு, திருச்சியில் உள்ள உறவினர் வீட்டில் இருந்த புலித்தோலையும், புலி எலும்புகளையும் எடுத்துக்கொண்டு கண்ணன், சுந்தரராஜ் ஆகியோரிடம் விற்பனை செய்வதற்காக பெருந்துறைக்கு வந்தபோது வனத்துறை அதிகாரிகளிடம் சிக்கி கொண்டதும் தெரிய வந்தது.
 
எனவே புலித்தோலை கடத்தி விற்பனை செய்ய முயன்றதாக துக்கி, மதப்போதகர் பீட்டர் குமார், நாகராஜ், சந்தோஷ், கண்ணன், சுந்தரராஜ் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். இவர்கள் பெருந்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும் தப்பி ஓடிய ரகு, ராஜன் ஆகிய 2 பேரையும், ரகுவின் உறவினரையும் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.   
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - ஈரோடு

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif