கொலை சம்பவம் நடந்த இடம் அருகே பழுதாகி நின்ற பாதிரியார் வேன் || kn nehru brother ramajayam murder van trichy
Logo
சென்னை 20-12-2014 (சனிக்கிழமை)
  • திருப்பதியில் புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசியன்று இலவச தரிசனத்தில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி
  • மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்: டெல்லி கோர்ட்டு உத்தரவு
  • தமிழக மீனவர்களை கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் விடுவிக்க பிரதமருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
கொலை சம்பவம் நடந்த இடம் அருகே பழுதாகி நின்ற பாதிரியார் வேன்
கொலை சம்பவம் நடந்த இடம் அருகே பழுதாகி நின்ற பாதிரியார் வேன்
திருச்சி, மார்ச். 30-

ராமஜெயம் பிணம் கிடந்த இடத்துக்கு அருகே நின்ற வேன் பாதிரியாருக்கு சொந்தமானது என தெரிய வந்துள்ளது. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயத்தை கடத்தி கொலை செய்த மர்ம நபர்கள் அவரது உடலை கல்லணை ரோட்டில் திருவளர்ச்சோலை என்ற இடத்தில் வீசிச்சென்றனர்.

ராமஜெயம் பிணம் கிடந்த இடத்தின் அருகே பளையபுரம் என்ற இடத்தில் அனாதையாக நின்ற டெம்போ வேன் கூலிப்படை பயன்டுத்தியதாக இருக்கலாம் என கூறப்பட்டது.

வேன் உரிமையாளரை பிடித்தால் கூலிப்படையை நெருங்கிவிடலாம் என்பதால் வேனில் இருந்த நெம்பர் பிளேட் மூலம் விசாரணை நடத்தினர். சென்னை பதிவு எண் என்பதால் அங்குள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் விசாரிக்கப்பட்டது. அப்போது அந்த வேன் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதி சஞ்சீவி நகரை சேர்ந்த பாதிரியார் செபாஸ்டியன் என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்தது.

உடனே பாதிரியார் செபாஸ்டியனை போலீசார் விசாரித்தனர். இதில், தான் அந்த வழியாக வந்த போது திடீர் என பழுது ஏற்பட்டதால் வேனை அங்கு நிறுத்தி வைத்ததாக கூறினார்.

இதையடுத்து அந்த வேன் பாதிரியாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - திருச்சி

section1

முசிறியில் போலி பதிவு எண் லாரியில் மணல் கடத்தல்: 2 பேர் கைது

இன்ஸ்பெக்டர் சியாமளாதேவி ஆகியோர் காவிரி ஆற்று பெரியார் பாலம் பகுதியில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ....»