நீர்மட்டம் 54 அடியாக குறைந்தது: குளம் போல் காட்சியளிக்கும் பாபநாசம் அணை || papanasam dam like pond decreased as 54 feet
Logo
சென்னை 25-11-2015 (புதன்கிழமை)
  • சென்னை விமானத்தில் கடத்த முயன்ற ரூ.4.5 லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல்: ஒருவர் கைது
  • ஜம்மு-காஷ்மீர்: குப்வாராவில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் சகிப்பின்மை குறித்து விவாதிக்க வேண்டும்: காங். கோரிக்கை
  • சென்னையில் மழை பாதிப்பு: நிவாரண முகாம்களில் 8000 பேர் தஞ்சம்
  • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3–வது டெஸ்ட்: இந்திய அணி - 116/5
  • புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: 27, 28, 29–ந்தேதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு
நீர்மட்டம் 54 அடியாக குறைந்தது: குளம் போல் காட்சியளிக்கும் பாபநாசம் அணை
நீர்மட்டம் 54 அடியாக குறைந்தது:
குளம் போல் காட்சியளிக்கும் பாபநாசம் அணை
சிங்கை, மார்ச். 28-
 
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பாபநாசம் அணை உள்ளது.பொதிகை மலை பூங்குளத்தில் உற்பத்தியாகி வரும் தாமிரபரணி தண்ணீர் பாணதீர்த்த அருவி வழியாக இந்த அணைக்கு வந்தடைகிறது.இந்த அணை ஆங்கிலேயர் காலத்தில் 1938-ல் அடிக்கல் நாட்டப்பட்டு 1943-ல் கட்டி முடிக்கப்பட்டது.
 
தாமிரபரணி, மயிலாறு, பாம்பனாறு, கவுதலையாறு, காரையார், சேர்வலாறு ஆகிய 6 ஆறுகளின் தண்ணீர் அணைக்கு வருகிறது. 144 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் 6-12-2011 நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 139.90 அடியாக இருந்தது.தற்போது நீர்மட்டம் 54 அடியாக உள்ளது. நீர்வரத்து 45 கன அடியாகவும், 200 கனஅடி தண்ணீர் வெளியேறியும் வருகிறது.
 
தற்போது நீர்மட்டம் 54 அடியாக உள்ளதால் அணையானது குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் அணையில் உள்ள பாணதீர்த்த அருவிக்கு படகுகளை செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.கவுதலையாறு வரையே படகுகள் இயக்கப்படுகிறது.
 
அதன்பிறகு சுற்றுலா பயணிகள் சுமார் 1 1/2 கி.மீ. தூரம் அருவிக்கு நடந்தே செல்லும் நிலை உள்ளது. அணையில் தண்ணீர் இல்லாததால் நெல்லை மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உள்ளது.
 
கடந்த ஆண்டு அணையில் தண்ணீர் இல்லாததால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அவ்வப்போது பெய்த மழையால் அணையில் ஓரளவு தண்ணீர் நிரம்பியது. கடந்த சில மாதங்களாக மழை இல்லாதால் அணையில் தண்ணீர் வரத்து முற்றிலும் குறைந்துள்ளது.
 
கோடை விடுமுறை விடப்பட உள்ளதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் பாபநாசத்தில் அலைமோதும். இந்தநிலையில் அணையில் தண்ணீர் இல்லாதது சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தண்ணீர் இல்லாததால் விவசாயமும் பாதிக்கப்படும் நிலையும் உள்ளது.
 
பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் சேர்வலாறு அணையும் உள்ளது.இந்த அணை மூலம் நெல்லை மாவட்டத்தில் ஏராளமான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த அணை பகுதியானது சுற்றுலா பகுதியாகவும் உள்ளது. இதனால் தினமும் அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
 
இந்தநிலையில் சேர்வலாறு அணையானது தூர்வாரி பல வருடங்கள் ஆகிறது. எனவே அதனை தூர்வார வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து அணையை தூர்வார உலக வங்கி ரூ.11 கோடி நிதி ஒதுக்கியது. அந்த நிதி மூலம் அணை தூர்வாரப்படவுள்ளது. மே அல்லது ஜூன் மாதம் தூர்வாரும் பணி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - திருநெல்வேலி

section1

திருப்பதி கோவிலுக்கு சென்ற வங்கி ஊழியர் வீட்டை உடைத்து நகை கொள்ளை

நெல்லை,நவ.25–பாளை கே.டி.சி. நகரில் உள்ள பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 45). இவர் வெளிநாட்டில் ....»