4 வது வழக்கில் கைதான நடராஜன் ஜாமீன் மனு தள்ளுபடி || natarajan bail petition rejected
Logo
சென்னை 07-02-2016 (ஞாயிற்றுக்கிழமை)
  • நட்சத்திர கிரிக்கெட் போட்டி: சென்னை மீண்டும் தோல்வி
  • விசாகப்பட்டினம்: சர்வதேச நாடுகளின் கடற்படை ஆய்வு நிகழ்ச்சிகளை பார்வையிட்டு பிரதமர் மோடி உரை
4-வது வழக்கில் கைதான நடராஜன் ஜாமீன் மனு தள்ளுபடி
4-வது வழக்கில் கைதான
நடராஜன் ஜாமீன் மனு தள்ளுபடி
தஞ்சை, மார்ச். 28-
 
தஞ்சை விளாரை சேர்ந்த ராமலிங்கம், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் சசிகலா கணவர் எம்.நடராஜன் மீது முதல் வழக்காக பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கில் மதுரை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது.
 
ஆனால் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில் திருச்சி தில்லைநகரை சேர்ந்த ரியல்எஸ்டேட் அதிபர் வரதராஜன் அளித்த புகாரின் பேரில் 2-வது வழக்கிலும், தஞ்சை விளார் ரவுண்டானா பகுதியைச் சேர்ந்த வின்சென்ட் ஆல்பர்ட், தஞ்சாவூர் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் கொடுத்த புகாரின்பேரில் 3-வது வழக்கிலும் அடுத்தடுத்து நடராஜன் கைது செய்யப்பட்டார்.
 
இந்த வழக்குகளில் ஜாமீன் பெறுவதற்கான முயற்சியில் அவரது வக்கீல்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள தமிழ்நகர் 7-ம் தெருவைச் சேர்ந்த சகுந்தலா (வயது 68), தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் கொடுத்த வீடு இடிப்பு புகாரின் பேரில் 4-வது வழக்கில் நேற்றுமுன்தினம் எம்.நடராஜன் கைது செய்யப்பட்டு தஞ்சை 2-வது ஜூடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
 
இவரை அடுத்தமாதம் (ஏப்ரல்) 9-ந்தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு முருகன் உத்தரவிட்டார். அதன்படி நடராஜன் மீண்டும் திருச்சி மத்தியசிறையில் அடைக்கப்பட்டார். இந்த 4-வது வழக்கில் ஜாமீன் வழங்க கோரி நடராஜன் தரப்பில் தஞ்சை 2-வது ஜூடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு முருகன் தள்ளுபடி செய்தார். இதனால் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்ய நடராஜன் தரப்பு வக்கீல்கள் தயாராகி வருகின்றனர். இன்று மனுதாக்கல் செய்வதாக தெரிகிறது.
 
மேலும் தஞ்சையைச் சேர்ந்த அமலாபுஷ்பமேரி நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடராஜன் மீது 5-வது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமீன் பெறுவதற்கான முயற்சியும் எடுக்கப்பட்டு வருகிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தஞ்சாவூர்

section1

தஞ்சையில் இன்று அ.தி.மு.க. பொதுக்கூட்டம்: நடிகை விந்தியா பேசுகிறார்

தஞ்சாவூர், பிப்.7–தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. இளைஞர், இளம் பெண்கள் பாசறை சார்பில் எழுச்சி தின ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif