20 ஓவர் போட்டியின் புதிய கேப்டனாக விராட் கோலியை நியமிக்கலாம்: மாலைமலர் கருத்துக்கணிப்பில் தகவல் || maalaimalar survey confirm Virat Kohli nominate the new captain of T20 match
Logo
சென்னை 08-02-2016 (திங்கட்கிழமை)
20 ஓவர் போட்டியின் புதிய கேப்டனாக விராட் கோலியை நியமிக்கலாம்: மாலைமலர் கருத்துக்கணிப்பில் தகவல்
20 ஓவர் போட்டியின் புதிய கேப்டனாக விராட் கோலியை நியமிக்கலாம்: மாலைமலர் கருத்துக்கணிப்பில் தகவல்
சென்னை, மார்ச். 27 -
 
மாலைமலர் இணையதளம் பரபரப்பான நிகழ்வுகள் குறித்த கருத்துக்கணிப்பை நாள் தோறும் நடத்தி வருகிறது. அதன்படி இரு தினங்களுக்கு முன்பு 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக யாரை நியமிக்கலாம் என்று மாலைமலர் இணையதளத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இந்த கருத்து கணிப்பில் வாசகர்கள் பதிலளிக்கும் விதமாக வீரேந்திர ஷேவாக், கவுதம் காம்பீர், சுரேஷ் ரெய்னா, விராட் கோலி ஆகியோரின் பெயர்கள் கொடுக்கப்பட்டிருந்தன.
 
இந்த கருத்துக்கணிப்பு மார்ச் 24-ல் துவங்கி மறுநாள் வரை நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 2810 வாசகர்கள் கலந்து கொண்டு தங்களது வாக்குகளை அளித்திருந்தனர்.
 
இதில் விராட் கோலியை புதிய கேப்டனாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று 36% பேர் வாக்களித்துள்ளனர். இவருக்கு அடுத்ததாக அதிரடி வீரர் ஷேவாக்கிற்கு 26% பேர் வாக்களித்துள்ளனர். 23% சதவீத வாக்குகள் பெற்று கவுதம் காம்பீர் மூன்றாவது இடத்திலும், 19% வாக்குகள் பெற்று கடைசி இடத்தை சுரேஷ் ரெய்னாவும் பிடித்துள்ளனர்.
 
டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் தோல்வியை தழுவி வருவதால் இவரது கேப்டன் பதவி விரைவில் பறிக்கப்பட இருக்கிறது. முதல் கட்டமாக 20 ஓவர் போட்டிக்கான அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார். டோனி தலைமையில் 2007-ம் ஆண்டு முதலாவது 20 ஓவர் கோப்பையை இந்தியா வென்றது. அதன்பிறகு 20 ஓவர் போட்டியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
 
வருகிற மார்ச் 30-ந்தேதி, இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டி நடக்கிறது. இந்தப்போட்டிக்கு பிறகு இலங்கையில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பைக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட இருக்கிறது.
 
இந்த புதிய கேப்டன் போட்டியில் ஷேவாக், காம்பீர், ரெய்னா, விராட் கோலி ஆகியோர் இருக்கின்றனர். மாலைமலர் வாசகர்களின் பெரும் ஆதரவு விராட் கோலிக்கு இருக்கிறது. இதே கருத்தை இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவும் வைத்திருக்கும் என நம்புவோம்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

மெக்கல்லத்தின் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரும், கேப்டனுமான பிரன்டன் மெக்கல்லம், இந்த மாதத்துடன் சர்வதேச கிரிக்கெட்டுக்கு ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif