விரிவான காப்பீட்டு திட்டத்தில் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் 1000 பேருக்கு மருத்துவ சிகிச்சை || chennai government hospital treatment insurance scheme
Logo
சென்னை 25-11-2015 (புதன்கிழமை)
விரிவான காப்பீட்டு திட்டத்தில் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் 1000 பேருக்கு மருத்துவ சிகிச்சை
விரிவான காப்பீட்டு திட்டத்தில் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் 1000 பேருக்கு மருத்துவ சிகிச்சை
சென்னை, மார்ச். 27-
 
தமிழக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் ஜனவரி மாதம் 11-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டது.   பல்வேறு நோயினால் பாதிக்கப்படும் ஏழை-எளிய குடும்பத்தினருக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வீதம் 4 வருடத்துக்கு ரூ.4 லட்சம் மருத்துவ சிகிச்சை இத்திட்டத்தின் கீழ் அளிக்கப்படுகிறது.
 
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உயர் சிகிச்சை வழங்கப்படுகிறது. இத்திட்டம் தொடங்கி இன்றுடன் 47 நாட்கள் ஆகிறது. இதில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதலிடம் வகிக்கிறது. திட்டம் தொடங்கியது முதல் இன்று வரை 1000 பேருக்கு மருத்துவ சிகிச்சை அளித்து அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் இது முதலிடம் பிடித்துள்ளது.
 
அறுவை சிகிச்சை, உயர் மருத்துவ சிகிச்சை வழங்கி இந்த சாதனையை எட்டியுள்ளது. மூளை ஆபரேஷன், சிறுநீரக ஆபரேசன், கல்லீரல் மருத்துவம், வயிறு மற்றும் குடல் சம்பந்தப்பட்ட சிகிச்சைகள் இவற்றில் முதன்மையானவையாகும். இதுதவிர ஏனைய நோய்களால் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் சிகிச்சை பெற்று பயன் அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.  
 
இதுகுறித்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் வி. கனகபை கூறியதாவது:-
 
முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் ஏழை-எளிய மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். உயர் சிகிச்சை பெற வசதி இல்லாத ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இதன் மூலம் உயிர் பெற்று மகிழ்ச்சியுடன் வீடு திரும்புகிறார்கள். இந்த மருத்துவமனையில் 1000 பேருக்கு மருத்துவ சிகிச்சை அளித்து சாதனை படைப்பதற்கு டாக்டர்களின் முழு முயற்சியே காரணம். எல்லா துறைத்தலைவர்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததால்தான் இதை செய்ய முடிந்தது.
 
இவ்வாறு அவர் கூறினார்.  
 
அரசு ஆஸ்பத்திரியின் முன்பாக முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் குறித்து மெகா டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டுள்ளது. 5 அடி அகலமும் 100 அடி நீளமும் கொண்ட இந்த விளம்பர பேனர் ஆஸ்பத்திரியின் முன்பு 2 இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.
 
மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெறக்கூடியவர்கள் எடுத்து வரவேண்டிய 2 ஆவணங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பேனர் பொதுமக்களை கவர்ந்துள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

ஏ.எஸ்.பொன்னம்மாள் மறைவு: ராகுல் காந்தி இரங்கல்

சென்னை, நவ.25–முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.எஸ்.பொன்னம்மாள் மறைவுக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். ....»