Logo
சென்னை 21-04-2014 (திங்கட்கிழமை)
இலங்கை ராணுவம் செக்ஸ் தொல்லை: தமிழ்ப் பெண்களுக்கு கொடுமை நீடிப்பு- தமிழ் எம்.பி. குற்றச்சாட்டு
சென்னை, மார்ச். 26-
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் கண்ணி வெடி அகற்றும் ஆபத்தான பணியில், இளம் பெண்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இளம் விதவைப் பெண்கள், ராணுவ வீரர்களின் செக்ஸ் பசிக்கு இரையாக்கப்படுகின்றனர்  என்று தமிழ் எம்.பி. சுமந்திரன் குற்றம் சாட்டினார்.  
 
இலங்கையின் தமிழ் தேசிய கூட்டணி (டி.என்.ஏ.) எம்.பி. சுமந்திரன் சென்னை வந்திருந்தார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் நடந்து வந்த நீண்ட கால யுத்தம் 2009, மே மாதம் முடிவுக்கு வந்தது. முள்வேலி முகாம்களில் அடைபட்டுக் கிடந்த தமிழர்கள், சொந்த இடங்களில் மறு குடியமர்த்தம் செய்யும் பணிகள் துவக்கப்பட்டன. 
 
வடக்கு மற்றும் கிழக்குப் பகுதி மக்களின் அன்றாட பிழைப்புக்காக அரசால் “கூலிக்கு வேலைத் திட்டம்” தொடங்கப்பட்டது. அரசின் கட்டுமானப் பணிகள், மற்றும் சாதாரண வேலைகளில் மட்டுமே பெண்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பது விதி ஆனால், கண்ணி வெடிகளை அகற்றும் ஆபத்தான வேலைகளில் தமிழ் இளம் பெண்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். 
 
இளம் பெண்களின் நிலைமை இவ்வாறு என்றால், இளம் விதவைகளின் நிலைமையோ இதை விட கொடுமையானது. போராளிகளின் இளம் விதவை மனைவிகள் 89,000 பேர், குழந்தைகளுடன் போதிய வாழ்வாதாரம் இன்றி தவிக்கின்றனர். அவர்கள் சிங்கள ராணுவத்தின் இளம் வீரர்களின் செக்ஸ் தொல்லைக்கு ஆளாகியுள்ளனர்.
 
 தமிழர்கள் பகுதிகள் இன்னும் ராணுவமயமாகவே உள்ளதால், இளம் ராணுவ வீரர்களின் செக்ஸ் பசிக்கு இளம் விதவைகள் இரையாகின்றனர். மிரட்டல் பயம், குடும்ப சூழ்நிலை இவற்றால், அவர்கள் இந்த கொடுமைக்கு இணங்கிப் போகும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். அனுசரித்துப் போகவில்லை எனில், அவர்களால் நிம்மதியாக வாழ முடியாது என்ற நிலை உள்ளது. 
 
சில சமயங்களில் வயதுக்கு வந்த மகள்களையும், ராணுவ வீரர்களின் “தேவை”க்கு அனுப்பி வைக்கப்படும் அவலம் நீடிக்கிறது. தமிழர் பகுதிகள் ராணுவ மயமாக்கப்பட்டதன், மிகப் பெரிய சமூக விளைவுதான் இது. ராணுவமும், சிங்களவர்களும் அப்பகுதிகளை ஆக்கிரமித்து இருப்பதால் தமிழர்கள் பலர் சொந்த மண்ணுக்கு திரும்ப முடியாமல், நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தங்கி இருக்கின்றனர்.
 
 கண்ணி வெடிகளை முழுமையாக அகற்றுவதில், அரசு நிர்வாகம் தாமத நிலையை கையாண்டு வருகிறது. இதனால், தமிழர்களில் ஒரு பகுதியினர், சொந்த இடங்களுக்கு திரும்ப முடியவில்லை. இந்திய அரசும், ஐ.நா. சபையும் தமிழர்களுக்கு சைக்கிள்கள் வழங்கியதால், அவர்களால்,  கிளிநொச்சி
,யான்குளம், நெடுங்கேர்னி மற்றும் பல பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுக்குச் சென்று தேவையான பொருள்களை வாங்கி வர முடிகிறது.
 
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றதை அடுத்து, இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது. தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள பரிந்துரைகளை ராஜபக்சே அரசு நிறைவேற்ற, இந்தியா வற்புறுத்த வேண்டும் என்று தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர்.
 
 இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் இருந்து ராணுவத்தை முழுமையாக வாபஸ் பெறாமலும், இயல்பு நிலைமை திரும்பாத வரையிலும் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் சொந்த மண்ணுக்கு திரும்ப முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

சோனியாகாந்தி ஆஸ்துமாவால் அவதி: சுற்றுப்பயணங்கள் ரத்து

புதுடெல்லி, ஏப்.21–காங்கிரஸ் கட்சியில் மக்களை கவரும் தலைவர்களாக சோனியா, ராகுல் இருவர் மட்டுமே உள்ளனர். இதனால் ....»

தொடர்புடைய வீடியோ
இலங்கையின் தண்டிக்கப்படாத போர்க் குற்றம்