பணியிடங்களில் பெண்கள் கவனத்திற்கு || attention to woman in working place
Logo
சென்னை 11-02-2016 (வியாழக்கிழமை)
பணியிடங்களில் பெண்கள் கவனத்திற்கு
பணியிடங்களில் பெண்கள் கவனத்திற்கு
தற்போதுள்ள காலகட்டத்தில் பெண்களும், ஆண்களும் சேர்ந்து வேலை செய்ய வேண்டிய கட்டாய சூழ்நிலை உள்ளது.
 
சில சமயங்களில் சில பெண்கள் தங்களுடன் வேலை பார்க்கும் ஆண்களை தவறானவர்கள் என்ற கண்ணோட்டத்திலே பார்க்கின்றனர். சில பெண்கள் எதார்த்தமாக ஆண்களிடம் பேசினால் கூட சில வகையான ஆண்கள் அவர்களை தவறாக நினைக்கிறார்கள்.
 
எனவே, ஆண்களை எதிரியாகவோ அல்லது ஆண்கள் அனைவருமே தவறானவர்கள் என்ற எண்ணம் கொண்டவராகவோ நீங்கள் இருந்தால், அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.
 
எல்லா ஆண்களும்  தவறானவர்கள் இல்லை என்பதையும் எல்லா ஆண்களும் நல்லவர்கள் என்பதையும் புரிந்து கொண்டு அவர்களின் சுய உருவத்தை முடிந்த வரை தெரிந்து கொள்ள முயலுங்கள். பெண்கள் ஆண்களிடம் பழகுவதற்கும் வரைமுறை உள்ளது.  அதை தாண்டாத வரை பெண்களுக்கு பிரச்சனை இல்லை.
Banner.gif

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif