மயிலம் அருகே விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் கொலையில் மேலும் 3 பேர் கைது || again 3 person arrest connection with viduthalai siruthai member murder case
Logo
சென்னை 13-02-2016 (சனிக்கிழமை)
மயிலம் அருகே விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் கொலையில் மேலும் 3 பேர் கைது
மயிலம் அருகே விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் கொலையில் மேலும் 3 பேர் கைது
மயிலம், மார்ச். 22-
 
மயிலம் அருகே உள்ள கீழ்எடையாளத்தை சேர்ந்தவர் மேகவண்ணன். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட செயலளாராக இருந்து வந்தார்.
 
இவர் கடந்த மாதம் மயிலத்தை அடுத்த கூட்டேரிப் பட்டு பகுதியில் பட்டப்பகலில் ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். பின்னர் அந்த கும்பல் தப்பி சென்றுவிட்டது.
 
இதுகுறித்து கீழ்எடையாளத்தை சேர்ந்த மனோகரன் உள்பட 12 பேர் மீது மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் மனோகரன் உள்பட 7 பேர் கைதானார்கள்.
 
போலீசாரின் தொடர் தேடுதல் வேட்டையில் இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட சிலர் மயிலம் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.
 
இதில் மனோகரனின் தம்பி பாலு (வயது28) மற்றும் அவரது உறவினர்கள் முருகன் (30), சரவணன் (22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக ஏழுமலை, காளிதாஸ் ஆகிய 2 பேரை போலீசார் தொடர்ந்து வலைவீசி தேடிவருகின்றனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - விழுப்புரம்

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif