மதுரையில் கட்டாய ஹெல்மெட்டை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு: அரசு பதிலளிக்க நோட்டீசு || madurai compulsory helmet highcourt case government answer
Logo
சென்னை 30-08-2014 (சனிக்கிழமை)
மதுரையில் கட்டாய ஹெல்மெட்டை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு: அரசு பதிலளிக்க நோட்டீசு
மதுரையில் கட்டாய ஹெல்மெட்டை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு: அரசு பதிலளிக்க நோட்டீசு
மதுரை, மார்ச். 16-  
 
மதுரையை சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் குரு விஜயன் (வயது45), மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-  
 
மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் போலீசார் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தியுள்ளனர். மோட்டார் சைக்கிளில் செல்லும் பொது மக்களை ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். ஹெல்மெட் அணியாதவர்களிடம் அபராதம் விதிக்கப்படுகிறது.
 
நானும் மோட்டார் சைக்கிளில் தினமும் சென்று வருகிறேன். தற்போது கோடைகாலமாக இருப்பதால் ஹெல்மெட் அணிவதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. தலைவலி, சைனஸ் பிரச்சினைகள், இருமல் மற்றும் ஜலதோஷம் ஏற்படுகிறது. மூளையிலும் கட்டிகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
மேலும் எடை அதிகமாக உள்ள ஹெல்மெட்டை தலையில் அணிவதால் சுகாதார நிலை ஏற்படுவதாலும், இதனால் விபத்துக்கள் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. எனவே ஹெல்மெட் அணிவதை அவரவர் விருப்பத்திற்கு விட்டுவிட வேண்டும். கட்டாயப்படுத்தக்கூடாது.
 
இதுதொடர்பாக தமிழக உள்துறை செயலாளர் மற்றும் போலீசார் அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே மதுரையில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களை ஹெல்மெட் அணிய போலீசார் கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளது என்று உத்தரவிட வேண்டும்.
 
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - மதுரை

section1

மதுரையில் பெண்ணை தாக்கி 5 பவுன் நகை பறிப்பு

மதுரை, ஆக. 30–மதுரை சூரியநகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த்ராஜா. இவரது மனைவி நீமா (வயது37). இவர் ....»