கோச்சடையான் படப்பிடிப்பு: ரஜினி, இன்று மாலை லண்டன் பயணம் || Kochadaiyan shooting rajini today evening london tour
Logo
சென்னை 24-11-2014 (திங்கட்கிழமை)
  • தேசிய பங்குச்சந்தை நிப்டி முதல் முறையாக 8500 புள்ளிகளை தொட்டது
  • முரளி தியோரா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மாநிலங்களவை ஒத்திவைப்பு
  • கைதான மீனவர்களை விடுவிக்க பிரதமருக்கு ஓ. பன்னீர் செல்வம் கடிதம்
  • வைகோ மீதான பொடா வழக்கு ரத்து
  • பாராளுமன்றம் சுமூகமாக நடைபெற ஒத்துழையுங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்
  • பீகாரில் பா.ஜ.க. தலைவர் சுட்டுக்கொலை: பதட்டம்-வன்முறை
கோச்சடையான் படப்பிடிப்பு: ரஜினி, இன்று மாலை லண்டன் பயணம்
கோச்சடையான் படப்பிடிப்பு: ரஜினி, இன்று மாலை லண்டன் பயணம்
சென்னை, மார்ச். 16-
 
ரஜினி கோச்சடையான் படத்தில் நடிக்கிறார். புராண காலத்தில் வாழ்ந்த சிவபக்த மன்னனை பற்றிய கதை மெகா பட்ஜெட்டில் தயாராகிறது. கே.எஸ். ரவிக்குமார் மேற்பார்வையில் ரஜினி மகள் சவுந்தர்யா இப்படத்தை இயக்குகிறார். கதாநாயகியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். சரத்குமார், நாசர், ஆதி, ஷோபனா, ருக்மணி என பெரும் நட்சத்திர பட்டாளம் இதில் நடிக்க உள்ளனர். கிராபிக்சில் நாகேசும் நடிக்கிறார்.
 
இப்படத்தில் ரஜினி சொந்த குரலில் ஒரு பாடலை பாடுகிறார். ராஜராஜ சோழன் படத்தில் சிவாஜி பாடும் ‘தென்றலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ் பெண்ணாள்’ என்ற பாட்டை போல் வசன நடையில் இப்பாடலை பாடியுள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் ஸ்டூடியோவில் பாடல் பதிவு முடிந்துள்ளது. கவிஞர் வைரமுத்து இப்பாடலை எழுதியுள்ளார்.
 
ஏற்கனவே மன்னன் படத்தில் ‘அடிக்குது குளிரு’ என்ற பாடலை ரஜினி சொந்த குரலில் பாடியுள்ளார். கோச்சடையான் படப்பிடிப்பு லண்டனில் மூன்று வாரங்கள் நடக்கிறது. இதற்காக லண்டன் செல்ல இன்றும் நாளையும் ரஜினிக்கும் இதர தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், விமானத்தில் டிக்கெட் முன் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
 
அநேகமாக இன்று இரவு ரஜினி லண்டன் புறப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு படப்பிடிப்பு முடிந்ததும் சென்னை, ஐதராபாத் ஸ்டூடியோக்களில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்துகின்றனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - சினிமா செய்திகள்

section1

திருமணமான நடிகைகளை ரசிகர்கள் ஒதுக்கவில்லை: அனுஷ்கா

திருமணமான நடிகைகளை ரசிகர்கள் ஒதுக்கவில்லை என்று அனுஷ்கா கூறியுள்ளார். தமிழில் ‘லிங்கா’ படத்தில் ரஜினி ஜோடியாகவும், என்னை ....»