மம்தா பானர்ஜி மிரட்டல் எதிரொலி: முலாயம்சிங் மாயாவதி ஆதரவை நாடும் காங்கிரஸ் || mamata banerjee threaten congress search mulayam singh and mayawathi support
Logo
சென்னை 26-11-2014 (புதன்கிழமை)
  • வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகத்தில் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • சார்க் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
  • சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் தீ விபத்து: 24 பேர் பலி
  • புதுச்சேரியில் பால்விலை ரூ.10 உயர்வு: நாளை முதல் அமல்
  • தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு
மம்தா பானர்ஜி மிரட்டல் எதிரொலி: முலாயம்சிங்-மாயாவதி ஆதரவை நாடும் காங்கிரஸ்
மம்தா பானர்ஜி மிரட்டல் எதிரொலி:
முலாயம்சிங்-மாயாவதி ஆதரவை நாடும் காங்கிரஸ்
புதுடெல்லி, மார்ச்.15-
 
பாராளுமன்றத்துக்கு கடந்த 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு எந்த ஒரு கட்சிக்கும் தனிபெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.
 
காங்கிரஸ் கட்சி 206 இடங்களில் வென்று அதிக வெற்றி பெற்ற கட்சியாக உள்ளது. ஆட்சி அமைக்க 272 எம்.பி.க்களின் ஆதரவு வேண்டும். இதையடுத்து 19 இடங்களில் வென்ற மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ், 18 இடங்களில் வென்ற தி.மு.க. உள்பட 10 கட்சிகள் ஆதரவுடன் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது.
 
கூட்டணி ஆட்சி என்பதால் மாநில கட்சிகளின் விருப்பத்துக்கு காங்கிரஸ் கட்சி கட்டுப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு விருப்பமான இலாகாக்களை கேட்டு பெற்றுள்ள மாநில கட்சிகள், சில விஷயங்களில் காங்கிரஸ் நடவடிக்கைகளுக்கு கடிவாளம் போடுகின்றனர்.
 
இது காங்கிரஸ் தலைவர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.   குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தீவிரவாத ஒழிப்புக்கான தேசிய படைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதை மத்திய அரசை நெருக்கடிக்குள் தள்ளி உள்ளது.
 
ரெயில்வே மந்திரி திரிவேதி மீதான அவரது நடவடிக்கைகள் காங்கிரஸ் தலைவர்களிடம் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மத்திய அரசை மிரட்டும் வகையில் அவர் எதிர்க்கட்சிகளின் கூட்டணியுடன் கை கோர்ப்பது சோனியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
 
மம்தாவின் இத்தகைய செயல்களால் மத்திய அரசு அடிக்கடி 'நித்திய கண்டம் பூரண ஆயுசு' என்ற ரீதியில் தான் நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறது.   மம்தா பானர்ஜியின் தொடர் மிரட்டலுக்கு முற்றுப் புள்ளி வைக்க தற்போது காங்கிரஸ் தலைவர்கள் மாற்று நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
 
23 எம்.பி.க்களை வைத்துள்ள முலாயம்சிங் யாதவின் சமாஜ் வாடி கட்சி மற்றும் 21 எம்.பி.க்களை வைத்துள்ள மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவை பெற காங்கிரஸ் தலைவர்கள் ஓசையின்றி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
 
தற்போது சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய இரு கட்சிகளும் மத்திய அரசை வெளியில் இருந்து ஆதரிக்கின்றன. எனவே மத்திய அரசுக்கு எந்த ஆபத்தும் வராது என்று காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
 
காங்கிரஸ் தலைவர்களின் நடவடிக்கைகளை அறிந்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மிரட்டுவது போல மிரட்டி விட்டு பிறகு பல்டி அடிப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
 
சமீபத்தில் கூட மந்திரி சபையில் இருந்து விலகுவதாக மிரட்டியது. ஆனால் திரிணாமுல் எம்.பி.க்கள் இன்று காலை நிருபர்களிடம் கூறுகையில், அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்றனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

கேரளாவில் பறவை காய்ச்சல்: வாத்துகள், கோழிகளை அழிக்க அரசு முடிவு

திருவனந்தபுரம், நவ. 26–கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பரவி உள்ளது. இந்த பகுதியில் ....»