கன்னியாகுமரி மாவட்ட தே.மு.தி.க. துணை செயலாளர் திடீர் ராஜினாமா || kanyakumari dmdk debuty secretary sudden resign
Logo
சென்னை 23-12-2014 (செவ்வாய்க்கிழமை)
  • சென்னை விமான நிலையத்தில் 4 கிலோ தங்கம் பறிமுதல்
  • சுங்கச்சாவடிகளில் பஸ், கார்களுக்கு சுங்க வரி விரைவில் ரத்து: புதிய திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு
  • ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஜார்கண்ட தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
  • காஷ்மீர் தேர்தல் முடிவுகள்: பா.ஜ.க 12, பி.டி.பி 9, தேசிய மா.கட்சி 7
  • ஜார்கண்டில் அர்ஜூன் முண்டா முன்னிலை
  • ஜார்கண்டில் ஹேமந்த் சோரன் முன்னிலை
  • ஜம்மு காஷ்மீரில் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் உமர் அப்துல்லா முன்னிலை
  • ஜார்கண்ட் தேர்தல் முடிவுகள்: பா.ஜ.க- 22, காங் 3, ஜெ.எம்.எம் 9
கன்னியாகுமரி மாவட்ட தே.மு.தி.க. துணை செயலாளர் திடீர் ராஜினாமா
கன்னியாகுமரி மாவட்ட தே.மு.தி.க. துணை செயலாளர் திடீர் ராஜினாமா
நாகர்கோவில், மார்ச். 13-
 
குமரி மாவட்ட தே.மு.தி.க. மாவட்ட துணை செயலாளர் மில்லர் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
 
நான் மாவட்ட கழக துணை செயலாளராக நியமிக்கப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி வந்தேன். கழகம் அறிவித்த போராட்டங்களிலும், பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொண்டேன்.
 
கடந்த சில மாதங்களாக கட்சி சார்பில் போராட்டங்கள், கூட்டங்கள் குறித்து எனக்கு எந்த ஒரு அறிவிப்பும் தரப்படாமல் ஒதுக்கப்பட்டு வந்தேன். அண்மையில் நடந்த கட்சி தேர்தலில் கூட எனக்கு எந்தவித பொறுப்பும் வழங்கப்படவில்லை.
 
தற்பொழுது அடிமட்ட தொண்டர்களை புறக்கணித்து விட்டு பணம் படைத்தவர்களுக்கு பதவி வழங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நான் தொடர்ந்து பணியாற்ற இயலாத நிலையில் இருப்பதாக உணர்கிறேன். ஆகவே நான் வகித்த மாவட்ட துணை செயலாளர் பதவியை இன்று முதல் ராஜினாமா செய்கிறேன்.
 
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

நாஞ்சில் சம்பத் மீதான அவதூறு வழக்கு வாபஸ்: அரசு மனு கோர்ட்டில் ஏற்பு

ம.தி.மு.க.வில் கொள்கை பரபரப்பு செயலாளராக முன்பு பதவி வகித்தவர் நாஞ்சில் சம்பத். இவர், கடந்த 2002-ம் ....»