மணப்பாறை அருகே ஆசிரியர் திட்டியதால் கல்லூரி மாணவர் விஷம் குடித்தார் || Manaparai by the college student near the teacher scolded swallowed poison
Logo
சென்னை 28-11-2015 (சனிக்கிழமை)
  • அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி
மணப்பாறை அருகே ஆசிரியர் திட்டியதால் கல்லூரி மாணவர் விஷம் குடித்தார்
மணப்பாறை அருகே ஆசிரியர் திட்டியதால் கல்லூரி மாணவர் விஷம் குடித்தார்
மணப்பாறை, மார்ச். 10-
மணப்பாறை அருகே ஆசிரியர் திட்டியதால் கல்லூரி மாணவர் விஷம் குடித்தார்.   திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பாலகருத்தம்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 21). மணப்பாறை அருகே குளித்தலை ரோட்டில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
 
நேற்று முன்தினம் பிராக்டிக்கல் தேர்வுக்கு சென்ற சக்திவேலுக்கு திடீர் என உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் தேர்வு எழுதாமல் வகுப்பறையில் தூங்கி உள்ளார். இதனை அறிந்த ஆசிரியர் ஒருவர் சக்திவேலை திட்டினார். இதனால் மனமுடைந்த அவர் வீடு திரும்பியதும் விஷம் குடித்தார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார்
 
. இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் சக்திவேலை மணப்பாறையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.   தகவல் அறிந்ததும் சக வகுப்பு மாணர்கள் திடீர் என சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 
அதனை தொடர்ந்து தாசில்தார் பெரியசாமி, இன்ஸ்பெக்டர் அதிவீரராமபாண்டியன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - திருச்சி