மதுரை ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி: திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் திவாகரன் அனுமதி || Trichy Government hospital Allow thivakaran
Logo
சென்னை 27-11-2015 (வெள்ளிக்கிழமை)
  • சென்னையில் 24 பள்ளிகளுக்கு 29-ந்தேதி வரை விடுமுறை
  • பிரேசிலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.4-ஆக பதிவு
  • டெல்லியில் ரூ.22.5 கோடியை வேனுடன் கடத்திய ஓட்டுநர் கைது
மதுரை ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி: திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் திவாகரன் அனுமதி
மதுரை ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி:
திருச்சி அரசு ஆஸ்பத்திரியில்
திவாகரன் அனுமதி
திருச்சி, மார்ச். 9-
திருவாரூர் ரிஷியூரை சேர்ந்த கஸ்தூரியின் வீடு இடிப்பு வழக்கு உள்பட 3 வழக்குகளில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவர் ஒரு மாத காலமாக சிறையில் இருந்து வருகிறார்.
 
அவருக்கு இருதய நோய், சிறுநீரக நோய் மற்றும் உடல் உபாதைகள் உள்ளது. எனவே திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற அனுமதி வழங்க வேண்டும் என்று கூறி திவாகரன் மனைவி ஹேமலதா மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தார்.
 
மனுவினை விசாரித்த நீதிபதி, திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் “டீன்” தலைமையிலான மருத்துவ குழு வினர் திவாகரனுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். இதற்கான மருத்துவ அறிக் கையினை வருகிற 12-ந்தேதி ஐகோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்படி திவாகரனை சிறைக்காவலர்கள் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். ஆண்கள் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
 
அவருக்கு முதல் கட்டமாக இருதயவியல், சிறுநீரகவியல், மூளை நரம்பியல் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து டீன் தலைமையிலான மருத்துவ குழுவினர் திவாகரனுக்கு சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால் அளவு ஆகியவற்றை பரிசோதித்தனர். தொடர்ந்து சிகிச்சை நடந்தது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - மாநிலச்செய்திகள்

section1

சீர்காழி அருகே கோவில் விழாவில் கோஷ்டி மோதல்

சீர்காழி, பிப். 8–சீர்காழி ஈசானி தெருவில் உள்ள வடபாதி மாரியம்மன் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ....»