ரியல் எஸ்டேட் அதிபராகும் ஆசையில் ரெயிலில் திருடினேன்: கைதான கொள்ளையன் வாக்குமூலம் || real estate like train thief lady arrest
Logo
சென்னை 07-02-2016 (ஞாயிற்றுக்கிழமை)
  • மதுரை பேருந்து விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு கவர்னர் ரோசையா இரங்கல்
ரியல் எஸ்டேட் அதிபராகும் ஆசையில் ரெயிலில் திருடினேன்: கைதான கொள்ளையன் வாக்குமூலம்
ரியல் எஸ்டேட் அதிபராகும் ஆசையில் ரெயிலில் திருடினேன்: 
 கைதான கொள்ளையன் வாக்குமூலம்
கோவை, மார்ச். 7-

கோவையில் இருந்து சென்னை செல்லும் ரெயில்களிலும், சென்னையில் இருந்து கோவை வரும் ரெயில்களிலும் குளிர்சாதன வசதி பெட்டிகளில் பயணம் செய்வோரிடம் சூட்கேஸ் மற்றும் பைகள் அடிக்கடி திருட்டு போவதாக போலீசுக்கு ஏராளமான புகார்கள் வந்து குவிந்தன.

அதன் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ரெயிலில் பயணம் செய்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின் சூட்கேசும் திருட்டு போனது. அதிலிருந்த செல்போனை திருடிச் சென்றவன் பயன்படுத்த தொடங்கினான். அதன் மூலம் போலீசார் அவனை பொறி வைத்து பிடித்தனர். கோவை சாய்பாபா காலனி ராமலிங்கம் நகரில் குடும்பத்துடன் வசித்து வரும் அவனது பெயர் கணேசன்(வயது46). அவன் கொடுத்த தகவலின் பேரில் 66 பவுன் நகை மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைதான கணேசன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

டிப்-டாப்பாக... 9-ம் வகுப்பு வரை படித்துள்ள நான் சிறு வயதில் மிகவும் கஷ்டப்பட்டேன். வறுமை காரணமாக சென்னைக்கு வேலைக்கு சென்றேன். அங்குள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறு வனத்தில் வேலை பார்த்து வந்தேன். ரெயிலில் கோவைக்கு திரும்பும் போது ஒரு சூட்கேசை திருடிக்கொண்டு நைசாக இறங்கி விட்டேன். அதில் ஏராளமாக பணம் மற்றும் நகைகள் இருந்தது.

அதன் மூலம் டிப்-டாப்பாக வாழத்தொடங்கினேன். அதற்கு வசதியாக கோவையில் இருந்து சென்னைக்கு செல்லும் போது ஏ.சி.பெட்டியில் பயணம் செய்வேன். மற்ற பயணிகள் அசந்த நேரத்தில் அவர்களின் பை மற்றும் சூட்கேஸ்களை திருடிக்கொண்டு அடுத்த ஸ்டேசனிலேயே இறங்கி விடுவேன். பயணத்தை தொடங்கும் போது வெறும் கையாக செல்வேன். இறங்கும் போது சூட்கேசுடன் வருவேன். அதில் உள்ள பணத்தில் மூலம் எனது மகள்களை கம்ப்யூட்டர் என்ஜினீயருக்கு படிக்க வைத்தேன்.

சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன் என்று எனது குடும்பத்தினரிடம் கூறியிருந்தேன். என் மீது அவர்களுக்கு சந்தேகம் வராதபடி நடந்து கொண்டேன். ரியல் எஸ்டேட் அதிபராகும் ஆசையில் தொடர்ந்து திருடி வந்தேன். சமீபத்தில் ஒரு சூட்கேசை திருடினேன். அதிலிருந்த செல்போனை பயன்படுத்திய போது தான் போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.

மேற்கண்டவாறு கணேசன் தனது வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - கோவை

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif