கோப்பையை வெல்வது யார்?: ஆஸ்திரேலியா இலங்கை நாளை பலப்பரீட்சை || tomorrow final australia vs srilanka play
Logo
சென்னை 26-11-2015 (வியாழக்கிழமை)
கோப்பையை வெல்வது யார்?: ஆஸ்திரேலியா-இலங்கை நாளை பலப்பரீட்சை
கோப்பையை வெல்வது யார்?:
ஆஸ்திரேலியா-இலங்கை
 நாளை பலப்பரீட்சை
அடிலெய்டு, மார்ச். 7-

3 நாடுகள் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் தகுதி பெற்றன. இந்திய அணி வெளியேற்றப்பட்டது. இறுதிப்போட்டி 3 ஆட்டங்களாக நடத்தப்படுகிறது.

பிரிஸ்பேனில் கடந்த 4-ந்தேதி நடந்த முதல் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா 15 ரன்னிலும், அடிலெய்டில் நேற்று நடந்த 2-வது இறுதிப்போட்டியில் இலங்கை 8 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

ஆஸ்திரேலியா- இலங்கை அணிகள் மோதும் 3-வது இறுதிப்போட்டி அடிலெய்டில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இரு அணிகளுமே சமபலம் வாய்ந்தவை என்பதால் கோப்பையை வெல்ல கடுமையான போட்டி இருக்கும்.

ஆஸ்திரேலியாவை விட இலங்கை அணி சற்று பலத்துடன் தான் உள்ளது. அந்த அணி முதல் இறுதிப் போட்டியில் கடுமையாக போராடி தான் தோற்றது. இதேபோல நேற்றைய 2-வது இறுதிப்போட்டியில் அந்த அணி ஆஸ்திரேலியாவை எளிதில் வீழ்த்தியது.

இலங்கை அணி இதே மாதிரியான ஆட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டால் அந்த அணிக்குத்தான் கோப்பை கிடைக்கும். கேப்டன் ஜெயவர்த்தனே, தில்சான், சங்ககரா, சண்டிமால், தரங்கா போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், மலிங்கா, குலசேகரா போன்ற சிறந்த பவுலர்களும் அந்த அணியில் உள்ளனர்.

நேற்றைய ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி சதம் அடித்த ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க் காயம் அடைந்துள்ளார். இதனால் நாளைய ஆட்டத்தில் அவர் விளையாடுவது சந்தேகமே. இதனால் வாட்சன் நாளைய போட்டிக்கு கேப்டனாக பணியாற்றுவார். பேட்டின்சனும் காயத்துடன் உள்ளார். இதனால் அவருக்கு பதிலாக ஹில்பென்ஹாஸ் இடம் பெறுகிறார். இரு அணிகளும் கோப்பை கைப்பற்ற கடுமையாக போராடும் என்பதால் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளைய இறுதிப்போட்டி இந்திய நேரப்படி காலை 8.50 மணிக்கு தொடங்குகிறது. தூர்தர்சன், ஸ்டார் கிரிக்கெட் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இரு அணி வீரர்கள் வருமாறு:-

ஆஸ்திரேலியா: கிளார்க் (கேப்டன்), வாட்சன் (துணை கேப்டன்), வார்னர், மேத்யூ வாடே, பீட்டர் பாரஸ்ட், கிறிஸ்டியன், மைக்ஹஸ்சி, டேவிட் ஹஸ்சி, மெக்காய், ஹில்பென்ஹாஸ், டோகர்ட்டி, பெர்ட்லீ, பேட்டின்சன்.

இலங்கை: ஜெயவர்த்தனே (கேப்டன்), தில்சான், சங்ககரா, சண்டிமால், கபுகேந்திரா, உபுல் தரங்கா, திரிமானே, குலசேகரா, மெகரூப், ஹெராத், மலிங்கா, மேத்யூஸ், பெரைரா. தமிகா பிராத், வெலுகேந்திரா, செனனாயகே.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

இளஞ்சிவப்பு நிற பந்துக்கு ஆதரவும் எதிர்ப்பும்

ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன். உள்ளூர் போட்டிகளில் விளையாடியதை வைத்து பார்க்கும் போது, வழக்கமான ....»