காமன்வெல்த் ஊழல்: விடுபட்ட ஆவணங்களால் விசாரணை பாதிப்பு || Missing documents make CWG corruption probe tough
Logo
சென்னை 26-11-2015 (வியாழக்கிழமை)
காமன்வெல்த் ஊழல்: விடுபட்ட ஆவணங்களால் விசாரணை பாதிப்பு
காமன்வெல்த் ஊழல்: விடுபட்ட ஆவணங்களால் விசாரணை பாதிப்பு
புதுடெல்லி, மார்ச் 5-

இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டுகளின் போது ஏற்பட்ட ஊழல் தொடர்பாக மத்திய கண்காணிப்பு துறை, சி.பி.ஐ., அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை ஆகிய விசாரணை அமைப்புகள் விசாரித்து வருகின்றன.

இந்த விசாரணை தொடர்பாக இந்த அமைப்புகளுக்கு சில ஆவணங்கள் கிடைக்கவில்லை. காமன்வெல்த் ஒருங்கிணைப்பு குழுவின் அலுவலகத்தில் சில ஆவணங்கள் கிடைக்கவில்லை என இந்த அமைப்புகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து மத்திய கண்காணிப்பு துறை கூறுகையில்:

ஒன்றுக்கும் மேற்பட்ட அமைப்புகள் இந்த ஊழல் விசாரணையில் ஈடுபடுவதால்தான் இந்த குழப்பம் ஏற்படுகிறது. அந்தந்த அமைப்புக்கு தேவையான ஆவணங்களை அவர்கள் எடுத்துக் கொள்வதால் மற்றவர்களுக்கு அந்த ஆவணங்கள் கிடைப்பதில்லை என தெரிவித்துள்ளது.

விசாரணையில் ஈடுபடும் அமைப்புகள் அவர்கள் கைப்பற்றிய ஆவணங்களை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். மேலும், காமன்வெல்த் போட்டிகள் தொடர்புடைய அனைத்து அரசு துறைகளும் அனைத்து ஆவணங்களையும் பாதுகாத்து வைக்குமாறு கூறப்பட்டுள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

இந்திய அரசியலமைப்பு கொள்கைக்கு அச்சுறுத்தல்: சோனியா கடும் விமர்சனம்

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று காலை துவங்கியது. இதில் இந்திய அரசியலமைப்பு சட்டம் தொடர்பாக ....»