போலீசாரை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்: கைது செய்தவர்களை விடுவிக்க வேண்டும் || RAMESWARAM fishermen strike against police
Logo
சென்னை 02-12-2015 (புதன்கிழமை)
போலீசாரை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்: கைது செய்தவர்களை விடுவிக்க வேண்டும்
போலீசாரை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்: கைது செய்தவர்களை விடுவிக்க வேண்டும்
ராமேசுவரம், மார்ச். 5-
கைது செய்தவர்களை விடுவிக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள ராமேசுவரத்தில் இருந்து கடந்த 3-ந்தேதி சுமார் 4 ஆயிரம் பக்தர்கள் கடுமையான சோதனைக்கு பின்பு படகுகள் மூலம் அழைத்து செல்லப்பட்டனர்.
 
 விழா முடிந்தவுடன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ராமேசுவரம் பக்தர்கள் படகுகளில் புறப்பட்டு மீண்டும் ராமேசுவரம் வந்து சேர்ந்தனர். அப்போது மீனவ சங்க தலைவர் தேவதாசுக்கு சொந்தமான விசைப்படகில் தனியார் தொலைக்காட்சி நிருபர்கள் உள்பட 30 பேர் அடையாள அட்டையுடன் மாலை கரை திரும்பினர். 
 
அப்போது அந்த படகை கடலோர காவல் படை போலீசார் மற்றும் கியூ பிராஞ்ச் போலீசார் நடத்திய சோதனையின்போது அந்த படகில் அடையாள அட்டை இல்லாமல் இலங்கையை சேர்ந்த உஷா (34), அவரது மகள் நிஷா (4) என்ற குழந்தையும் இருந்தனர். அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து ராமேசுவரம் மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.
 
இதை தொடர்ந்து அந்த படகை ஓட்டி வந்த படகோட்டிகள் கண்ணன், ஆயுதபூஜை, மற்றொரு கண்ணன், பாண்டி, குமரேசன், முனீஸ்வரன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மண்டபம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டனர்.
 
இந்நிலையில் இன்று காலை கைது செய்யப்பட்ட படகோட்டிகள் 6 பேரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும். படகோட்டிகள் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ராமேசுவரம் துறைமுகத்தில் உள்ள மீன்பிடி டோக்கன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.  மற்றும் கைது செய்யப்பட்ட படகோட்டிகளை விடுவிக்கும் வரை மீன்பிடிக்க செல்ல மாட்டோம் என ராமேசுவரம் மீனவர்கள் முடிவு செய்து உள்ளனர்.
 
அதன்படி இன்று 2500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் 800 விசைபடகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து மீனவர் சங்க தலைவர்கள் தேவதாஸ், போஸ் ஆகியோர் கூறியதாவது:-
 
கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா முடிந்து திரும்பியபோது இந்திய துணை தூதரக அதிகாரிகள் உத்தரவின்படிதான் இலங்கை பெண் உஷா, அவரது மகளையும் ராமேசுவரம் படகோட்டிகள் ஏற்றி வந்து உள்ளனர். எனவே ராமேசுவரம் படகோட்டிகளை கைது செய்தது கண்டிக்கத்தக்கது. அவர்களை விடுதலை செய்யும்வரை எங்களின் வேலை நிறுத்தம் தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர். 
 
 இந்தியா-இலங்கை உறவுக்கு பாலமாக விளங்கும் கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழா முடிந்த மறுநாளே ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ராமேசுவரம் கடற்கரை பகுதியில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்ட படகோட்டிகளை இன்று ராமேசுவரம் கோர்ட்டில் கடலோர காவல்படை போலீசார் ஆஜர்படுத்துகின்றனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - இராமநாதபுரம்

AadidravidarMatrimony_300x100px_28-10-15-3.gif