எம்.கே.பி.நகரில் கைக்குழந்தையுடன் பெண் மாயம் கடத்தப்பட்டாரா? || mother woman child hide kidnapped
Logo
சென்னை 11-02-2016 (வியாழக்கிழமை)
எம்.கே.பி.நகரில் கைக்குழந்தையுடன் பெண் மாயம் கடத்தப்பட்டாரா?
எம்.கே.பி.நகரில் கைக்குழந்தையுடன் பெண் மாயம் கடத்தப்பட்டாரா?
பெரம்பூர், மார்ச் 3-
 
சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியைச் சேர்ந்தவர் சையதுமுகமது துபாயில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி நசரத் பானு (வயது 22). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நசரத்பானுவை சையத் முகமது சென்னை எம்.கே.பி. நகரில் உள்ள தாய் வீட்டுக்கு பிரசவத்துக்கு அனுப்பியிருந்தார். அங்கு அவருக்கு ஆண் குழ்நதை பிறந்தது.
 
சையத் அசலாம் என பெயரிடப்பட்ட அந்த குழந்தைக்கு தற்போது 1 1/2 வயது ஆகிறது. குழந்தை பிறந்த பிறகும் நசரத்பானு தாய் வீட்டிலேயே தங்கியிருந்தார்.  
 
இந்த நிலையில் கடந்த மாதம் 3-ந்தேதி நசரத் பானு தனது குழந்தையுடன் மாயமானார். பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. அவர் கடத்தப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.
 
இதுகுறித்து நசரத் பானுவின் தாயார் ரகமத் நிஷா துபாயில் உள்ள மருமகனுக்கு தகவல் கொடுத்தார். அவர் உடனடியாக ஊர் திரும்பினார். தனது மனைவி, மகன் மாயமானது குறித்து எம்.கே.பி. நகர் போலீசில் புகார் செய்தார். உதவி கமிஷனர் மனோகரன், உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் அறுமுகம், சப்- இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல்: நியூ ஹாம்சயரில் டிரம்ப், சாண்டர்ஸ் வெற்றி

ஒபாமாவின் பதவிக்காலம் முடிய உள்ளதால் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வரும் நவம்பர் மாதம் ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif