திருப்பத்தூர் அருகே தே.மு.தி.க. பிரமுகர் வெட்டி படுகொலை: 5 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு || Tirupathur near dmdk candidate murder
Logo
சென்னை 31-07-2015 (வெள்ளிக்கிழமை)
  • இந்தியா - வங்கதேசம் எல்லை ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது
  • பவானி சாகர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு
  • வடசென்னை அனல்மின் நிலைய முதல் நிலையின் 3-வது அலகில் மின் உற்பத்தி பாதிப்பு
திருப்பத்தூர் அருகே தே.மு.தி.க. பிரமுகர் வெட்டி படுகொலை: 5 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு
திருப்பத்தூர் அருகே தே.மு.தி.க. பிரமுகர் வெட்டி படுகொலை: 5 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு
வேலூர், மார்ச்.3-
 
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே கும்மிடிகாம்பட்டி கொட்டாவூரைச் சேர்ந்தவர் சாமுடி. இவரது மகன் வெங்கடேசன் (வயது28), சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் பணிபுரிந்து வந்தார். மேலும் இவர் இதே ஊரின் தே.மு.தி.க.வில் முன்னாள் கிளை செயலாளர் ஆவார். இவருக்கு பூங்காடி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
 
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து தனது சொந்த ஊருக்கு வெங்கடேசன் வந்தார். நேற்று இரவு தனது நண்பர்கள் அருள், பாரதி ராஜா, சிவக்குமார் ஆகியோருடன் சேர்ந்து, அதே ஊரில் உள்ள பூங்காவனத் தம்மன் கோவில் முன்பு பேசிக் கொண்டிருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் மர்ம நபர்கள் 5 பேர் அங்கு வந்தனர்.
 
அவர்கள், கண் இமைக்கும் நேரத்தில் வெட்டுக் கத்தியால் வெங்கடேசனை சரமாரியாக வெட்டினர். அதனை கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள் உயிர் பிழைத்தால் போதும் என அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த வெங்கடேசன் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
 
கொலை கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் காட்டுத் தீ போல் பரவியது. ஊர் பொதுமக்கள் அனைவரும் சம்பவ இடத்தில் குவிந்தனர். இதற்கிடையில் வெகு நேரமாகியும் வெங்கடேசனின் தம்பி குபேந்திரன் சம்பவ இடத்திற்கு வரவில்லை. இதனால் வெங்கடேசனை கொலை செய்த கும்பல் குபேந்திரனை ஏதாவது செய்திருப்பார்களோ? என உறவினர்களுக்கு அச்சம் ஏற்பட்டது.
 
தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு நடராஜன், கந்திலி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் (பொறுப்பு) மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வெங்கடேசனின் உறவினர்கள், கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யும் வரை பிணத்தை இங்கிருந்து எடுக்க விடமாட்டோம் என்றும், வெங்கடேசனின் தம்பி குபேந்திரனை உடனடியாக கண்டுபிடித்து தர வேண்டும் என கூறி போலீசாரை முற்றுகையிட்டனர்.
 
இதனால்அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு போலீசார் உறவினர்களை சமாதானம் செய்து வெங்கடேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர்.   இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகள் எதற்காக வெங்கடேசனை கொலை செய்தார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
சம்பவ இடத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி நேரில் சென்று விசாரணை நடத்தினார்.   மேலும் தனிப்படை அமைத்து கொலையாளிகள் 5 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதத்தில் கொலை நடந்ததாக கூறப்படுகிறது. கொலையாளிகளை பிடிக்க தனிப்படையினர் ஆந்திரா, பெங்களூர் விரைந்துள்ளனர். வெங்கடேசனின் தம்பி நள்ளிரவில் திரும்பி வந்தார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

அப்துல்கலாம் பிறந்தநாளை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்: பிரதமரிடம், விஜயகாந்த் கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் உடல் அடக்கம் ராமேஸ்வரத்தில் நேற்று நடந்தது. அப்துல்கலாமுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி ....»

MM-TRC-B.gif