மத்திய அமெரிக்காவில் பயங்கர சூறாவளிக் காற்று: 27 பேர் பலி || central america Hurricanes 27 persons dead
Logo
சென்னை 13-02-2016 (சனிக்கிழமை)
மத்திய அமெரிக்காவில் பயங்கர சூறாவளிக் காற்று: 27 பேர் பலி
மத்திய அமெரிக்காவில் பயங்கர சூறாவளிக் காற்று: 27 பேர் பலி
சிகாகோ, மார்ச் 3-
 
மத்திய அமெரிக்காவின் தென்கிழக்கு இந்தியானாவை பயங்கர சூறாவளிக் காற்று தாக்கியது. 5 முறை தாக்கிய இந்த இயற்கை சீற்றத்தால் கிளார்க் கவுண்டியில் உள்ள ஹென்றிவில்லெ, மேரிஸ்வில்லெ ஆகிய நகரங்கள் மற்றும் வாஷிங்டன் கவுண்டியில் உள்ள பெக்கின் மற்றும் நியூ பெக்கின் ஆகிய நகரங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
 
இந்த பகுதிகளில் உள்ள மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டதோடு வீடுகளும் இடிந்து விழுந்தன. மேலும் பல வாகனங்கள் தூக்கி எறியப்பட்டன. 
 
மேரிஸ்வில்லெ நகரம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீட்பு குழுவினரின் தகவல்கள்படி இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள்: அமெரிக்க தூதருக்கு இந்தியா சம்மன்

வாஷிங்டன், பிப். 13–பாகிஸ்தானுக்கு அமெரிக்கா 8 எப் – 16 ரக போர் விமானங்களை விற்பனை ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif