முஷரப்பை கைது செய்ய பாகிஸ்தான் போலீஸ் தீவிரம்: சர்வதேச போலீஸ் உதவியை நாடியது || musharf arrest pakistan police international police help
Logo
சென்னை 26-10-2014 (ஞாயிற்றுக்கிழமை)
முஷரப்பை கைது செய்ய பாகிஸ்தான் போலீஸ் தீவிரம்: சர்வதேச போலீஸ் உதவியை நாடியது
முஷரப்பை கைது செய்ய பாகிஸ்தான் போலீஸ் தீவிரம்: சர்வதேச போலீஸ் உதவியை நாடியது
இஸ்லாமாபாத், பிப். 26-

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் 2008-ம் ஆண்டு அதிபர் பதவியை ராஜினாமா செய்தபிறகு லண்டன் மற்றும் துபாயில் வசித்து வருகிறார்.

முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொல்லப்பட்ட வழக்கில் முஷரப் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது. இதை முஷரப் மறுத்து இருந்தார்.

இதேபோல முஷரப் மீது மேலும் பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது. அனு விஞ்ஞானி அப்துல் ரகுமானை கடத்தி கொல்லப்பட்டது. அக்பர் புகாதி கொல்லப்பட்டது உள்பட பல வழக்குகளில் முஷரப் மீது புகார் கூறப்பட்டது.

முஷரப்பை தேடப்படும் குற்றவாளியாக பாகிஸ்தான் கோர்ட்டு அறிவித்தது. அவருக்கு எதிராக கைது வாரண்டும் சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. வெளிநாட்டில் இருக்கும் முஷரப்பை கைது செய்ய பாகிஸ்தான் அரசு தீவிர முயற்சியில் இறங்கியது. இதற்காக சர்வதேச போலீஸ் உதவியை நாடுகிறது.

இது தொடர்பாக பாகிஸ்தான் உள்துறை மந்திரி ரகுமான்மாலிக் கூறும் போது முஷரப்பை கைது செய்வதற்காக சர்வதேச போலீசுக்கு பாகிஸ்தான் புலனாய்வு கூட்டமைப்பு சில தினங்களில் கடிதம் எழுதும், அதற்கான வேலைகள் தொடங்கி விட்டன. முஷரப் விரைவில் பாகிஸ்தான் கொண்டு வரப்படுவார் என்றார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

பால் விலை உயர்வுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

பால் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்துவதாக தமிழக அரசு நேற்று அறிவித்தது. இதற்கு தமிழக அரசியல் ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif