தகுதிப் போட்டியில் தோல்வி: லண்டன் ஒலிம்பிக் வாய்ப்பை இழந்த இந்திய மகளிர் ஆக்கி அணி
பதிவு செய்த நாள் :
சனிக்கிழமை,
பெப்ரவரி 25,
11:24 PM IST
0
கருத்துக்கள்
புதுடெல்லி,பிப்.25-
லண்டன் ஒலிம்பிக்கில் விளையாடும் வாய்ப்பை இந்திய மகளிர் அணி இழந்துள்ளது. மகளிர் பிரிவில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - இத்தாலி அணிகள் மோதின. பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இன்று நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. ஒலிம்பிக் தகுதியை நிர்ணயிக்கும் இப்போட்டியில் 1-3 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்கா அணியிடம் தோல்வி அடைந்தது.
இத்தோல்வியால் 32 ஆண்டுகளுக்குப்பின் ஒலிம்பிக்கில் விளையாடும் இந்திய மகளிர் ஆக்கி அணியின் கனவு கலைந்தது.
close
பெங்களூரில் நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் 24 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ....»
மேலும் விளையாட்டுச்செய்திகள்
0
கருத்துக்கள்