கட்காரி கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன்: எடியூரப்பா உறுதி || not to attend kadgari meeting yeddyurappa defiant
Logo
சென்னை 30-10-2014 (வியாழக்கிழமை)
கட்காரி கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன்: எடியூரப்பா உறுதி
கட்காரி கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன்: எடியூரப்பா உறுதி
பெங்களூர்,பிப்.25-
 
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நிதின் கட்காரி நடத்தும் கர்நாடக பாரதீய ஜனதா எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தானும், தனது ஆதரவு எம்.எல்.ஏக்களும் கலந்துகொள்ளப் போவதில்லை என கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா உறுதிபட தெரிவித்துள்ளார்.
 
வரும் 27-ம் தேதிக்குள் தன்னை முதல்வர் ஆக்க வேண்டும் என்ற எடியூரப்பாவின் கோரிக்கைய நேற்று நிராகரித்த நிதின் கட்காரி, இதுகுறித்து விவாதிக்க மார்ச் 3-ம் தேதி கர்நாடக பாரதீய ஜனதா எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
 
ஆனால் கட்காரியின் கூட்டத்திற்கு வரமாட்டேன் எனவும், 27-ம் தேதி என் முடிவை அறிவிப்பேன் எனவும் எடியூரப்பா கூறியுள்ளதால் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

இலங்கையில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 150 ஆக உயர்வு

கொழும்பு, அக். 30–இலங்கை தலைநகர், கொழும்புவில் இருந்து 200 கி.மீட்டருக்கு கிழக்கே பதுளை மாவட்டம் உள்ளது. ....»