சென்னை, பிப். 24-
கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனே திறக்கக் கோரி காங்கிரஸ் சார்பில் விழிப்புணர்வு போராட்டம் சென்னை நுங்கம்பாக்கம் ஜெயலட்சுமிபுரத்தில் இன்று நடந்தது.
முன்னாள் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் அணுமின் நிலையத்தின் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மின் பற்றாக்குறையால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கிறது. விவசாயிகள், தொழிலாளர்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள், மாணவர்கள் பாதிக்கப் படுவதால் உடனே அணுமின் நிலையத்தை திறக்க வேண்டும்.
இல்லையென்றால் அரிக்கேன் விளக்கு காலத்திற்கு பின் தள்ளப்படுவோம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஜெயலட்சுமிபுரம் பகுதி மக்கள் மத்தியில் பிரசாரம் செய்யப்பட்டது.
அரிக்கேன் விளக்கு, டார்ச்லைட் கொடுத்து இந்த நூதன பிரசாரத்தை செல்வபெருந்தகை செய்தார்.
போராட்டத்தில் நிலவன், சவுந்தர், மகாராஜன், வாகை செல்வன், வின்சென்ட், தனவேல், சக்திபாலன், கராத்தே செல்வம், சுப்புராஜ், குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.