சென்னை, பிப் 24-
வேளச்சேரி என்கவுண்டரில் 5 கொள்ளையர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி இலாகா பூர்வ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி அடையார் துணை கமிஷனர் சங்கர் புகாரின் பேரில் வேளச்சேரி போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
விசாரணை அதிகாரியாக தியாகராய நகர் துணை கமிஷனர் அசோக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
சி.பி.சி.ஐ.டி. விசாரணை பொறுப்பை ஏற்கும் வரை இவர் என் கவுணடர் பற்றி விசாரணை நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.